Connect with us
Cinemapettai

Cinemapettai

lingusamy-suriya-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஞ்சானுக்கு பிறகு கண்டுகொள்ளாத சூர்யா.. லிங்குசாமிக்கு வாய்ப்பு கொடுத்த முன்னணி நடிகர்

தமிழ் சினிமாவின் பக்கா கமர்ஷியல் இயக்குனர் என பெயரெடுத்த லிங்குசாமி சூர்யாவுடன் இணைந்து அஞ்சான் என்ற ஒரே ஒரு படத்தை எடுத்துவிட்டு தற்போது வரை வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வருகிறார்.

ஆனந்தம், ரன், சண்டக்கோழி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் தான் லிங்குசாமி. லிங்குசமி மற்றும் சூர்யா கூட்டணியில் முதன்முதலாக வெளியான திரைப்படம் அஞ்சான். 2014 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது.

அதுமட்டுமில்லாமல் சூர்யா மற்றும் லிங்குசாமி ஆகிய இருவரின் கேரியரும் அஞ்சான் படத்திற்கு பிறகு படுமோசமாக அமைந்தது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். சமீபத்தில்தான் சூர்யா தட்டுத்தடுமாறி சூரரைப் போற்று படத்தின் மூலம் வெற்றி பெற்று மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டில் மீட்டு விட்டார்.

ஆனால் லிங்குசாமிக்கு கடந்த 6 வருடமாக ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. தொடர்ந்து பலமுறை பல முன்னணி நடிகர்களிடம் கதை சொல்லியும் லிங்குசாமி படத்தில் நடிக்க மறுத்து விட்டார்களாம். அதில் சூர்யாவும் ஒருவர்.

அதுமட்டுமில்லாமல் லிங்குசாமி தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து பல நஷ்டத்தை சந்தித்தார். அதிலும் குறிப்பாக கமலஹாசனை வைத்து எடுத்த உத்தமவில்லன் திரைப்படம் லிங்குசாமியை அடியோடு காலி செய்துவிட்டது.

rampotheni-cinemapettai

rampotheni-cinemapettai

தமிழில் வாய்ப்பு தர மறுத்த முன்னணி நடிகர்களே ஒதுக்கிவிட்டு தற்போது தெலுங்கில் பிரபல ஹீரோவாக வலம் வரும்போது ராம் போத்தனி என்பவருடன் ஒரு படத்தில் களமிறங்க உள்ளாராம் லிங்குசாமி. அதற்காக வெறித்தனமாக கதை எழுதி இருக்கிறாராம்.

Continue Reading
To Top