fbpx
Connect with us

சண்டக்கோழி 2 எடுக்கும் முடிவில் லிங்குசாமி திடீர் மாற்றம்

சண்டக்கோழி 2 எடுக்கும் முடிவில் லிங்குசாமி திடீர் மாற்றம்

sandakozhi-2-lingusamyஅஞ்சான், உத்தமவில்லன் ஆகிய படங்களின் தொடர் தோல்வி காரணமாக துவண்டிருந்த தயாரிப்பாளர் லிங்குசாமி, சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ பட வெற்றியால் தற்போது ஓரளவு மீண்டும் வந்துள்ளார். இந்நிலையில் அடுத்து அவர் விஷால் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு உருவான வெற்றிபடமாகிய சண்டக்கோழி படத்தின் தொடர்ச்சியான ‘சண்டக்கோழி 2’ படத்தை இயக்குவார் என்ற செய்தி வெளிவந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

‘சண்டக்கோழி 2’ படத்திற்கு முன்னர் லிங்குசாமி ஒரு தெலுங்கு படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இந்த படம் லிங்குசாமி இயக்கும் முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முத்தையா இயக்கி வரும் ‘மருது’ படத்தில் நடித்து வரும் விஷால், மீண்டும் லிங்குசாமியுடன் இவ்வருட இறுதியில் சண்டக்கோழி 2′ படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top