Vetrimaaran : வெற்றி இயக்குனராக திகழ்ந்து வரும் வெற்றிமாறன் தற்போது சூரியை வைத்து விடுதலை 2 படத்தை எடுத்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு இன்னும் எடுக்க வேண்டி இருப்பதால் அதில் மும்மரம் காட்டி வருகிறார். இதற்கு அடுத்தபடியாக சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை எடுக்க இருக்கிறார்.
இதற்கான கிராபிக்ஸ் பணிகளுக்காக வெற்றிமாறன் லண்டன் செல்ல இருக்கிறார். வாடிவாசல் படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படுவதால் ஏற்கனவே லண்டனில் காளைக்கான பயிற்சி மற்றும் கிராபிக்ஸ் வேலைகள் நடைபெற்று வந்தது.
இந்த சூழலில் இந்தியன் 2 படத்தைப் போல வாடிவாசல் படத்தில் வெற்றிமாறன் பல வேலைகள் செய்ய உள்ளார். அதாவது இந்தியன் 2 படத்தில் பெரும்பாலான காட்சிகள் பிஎப்எக்ஸ் வேலைகள் வைத்து தான் எடுக்கப்பட்டது. கமல் பல காட்சிகளில் ததுரூபமாகவே தெரியவில்லை.
இந்தியன் 2 படத்தை போல் வாடிவாசலில் வெற்றிமாறன் செய்யும் வேலை
அதேபோல் தான் இந்த படத்திலும் சூர்யா மற்றும் காளை இடம்பெறும் காட்சிகளில் கிட்டத்தட்ட 70% கிராஃபிக்ஸ் செய்யப்பட இருக்கிறதாம். வெற்றிமாறன் எப்போதுமே எதார்த்தமான படங்களை கொடுத்து வெற்றி கண்டவர்.
முதல்முறையாக தொழில்நுட்பத்தை நம்பி இறங்கும் நிலையில் படம் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது வாடிவாசல் படம் வெளியானால்தான் தெரியவரும். வருகின்ற டிசம்பர் மாதம் விடுதலை 2 படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
அதன் பிறகு உடனடியாகவே வாடிவாசல் படபிடிப்பை வெற்றிமாறன் தொடங்க இருக்கிறார். இதற்கு முன்னதாக சூர்யாவின் கங்குவா படத்திற்காக அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
தோல்வியே காணாத வெற்றிமாறன்
- இந்தியன் 2 ஆபத்தை அறிந்த வெற்றிமாறன்
- விஜய் சேதுபதிக்கு வெற்றிமாறன் கொடுக்கும் குடைச்சல்
- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெற்றிமாறன்