Tamil Cinema News | சினிமா செய்திகள்
போஸ்டருடன் விஜய் தேவர்கொண்டாவின் லைகர் பட ரிலீஸ் அப்டேட் வெளியானது- அட நம்ம ஊரு ஜாக்கி சான்
விஜய் தேவர்கொண்டா இன்றையை இளசுகளின் யூத் சென்சேஷன். அர்ஜுன் ரெட்டி என்ற படம் வாயிலாக தெலுங்கு சினிமா என்ற எல்லையை கடந்து நம் இந்திய அளவில் தன் கொடி நாட்டிவிட்டார். மனிதர் நிற்பது, நடப்பது, பேசுவது என அனைத்துமே இன்று ட்ரெண்டிங் சமாச்சாரம் தான்.
பூரி ஜகன்னாத் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியாகும் 10 வது படம் லைகர் (LION + TIGER = LIGER) . பூரி ஜகன்னாத், சார்மி மற்றும் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். ஹிந்தி மற்றும் தெலுங்கில் ஷூட் செய்யப்பட்டு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப் செய்து 5 மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

liger
பேச்சு குறைபாடு உடைய மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரர் ரோலில் விஜய் நடித்துள்ளார். இப்படத்தில் அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கிறார். ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி போன்றவர்கள் முக்கிய ரோலில் நடிக்கும் ப்ரொஜெக்ட்.
பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் திரை அரங்கில் செப்டம்பர் 9 ரிலீசாகிறது என்ற அறிவிப்புடன் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

liger vijay devarkonda
விஜய் தேவர்கொண்டாவின் ரசிகர்கள் இந்த போஸ்டரை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
