fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஒரு மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய லிப்ட் பட வீடியோ பாடல்.. சிவகார்த்திகேயன் குரலில் கவின் கலக்கல் டான்ஸ்

kavin-sivakarthikeyan-life-inna-maylu

Videos | வீடியோக்கள்

ஒரு மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய லிப்ட் பட வீடியோ பாடல்.. சிவகார்த்திகேயன் குரலில் கவின் கலக்கல் டான்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததின் மூலம் பிரபலமடைந்தவர் கவின். பிறகு வெள்ளித்திரையில் நட்புனா என்னன்னு தெரியுமா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

பின்பு பட வாய்ப்புகள் கிடைக்காததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். ஈகோ என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் லிப்ட் படத்தில் கவின் ராஜ் நடித்துள்ளார்.

இவருக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்துள்ளார்.லிப்ட் படத்தின் மோஷன் போஸ்டரை முன்னணி இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அஜய் ஞானமுத்து, வெங்கட்பிரபு, விக்னேஷ் சிவன், ரவிக்குமார் ஆகியோர் வெளியிட்டனர். இப்படத்தின் டிரைலரை தனது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக வெளியிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இல் வெளியாகிறது. லிப்ட் படத்தில் பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ‘இன்னா மயிலு’ என்ற பாடலை பாடியுள்ளார்.

இந்தப் பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இன்னா மயிலை பாடலுக்கு கவின் நடனமாடியுள்ளார். இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று தற்போது வைரல் ஆகியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top