ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

ஊழியர்களுக்கு ரூ.7 லட்சம் வரையிலான ஆயுள் காப்பீடு.. EPFO அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி

ஊழியர்களுக்கு ரூ.7 லட்சம் வரையிலான ஆயுள் காப்பீடு சலுகை வழங்கப்படும் என மத்திய அரசின் அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வருங்கால வைப்பு நிதி திட்டம்

இபிஎஃப் என்பது ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டமாகும். இது ஊழியர்கள் தம் பணிக்காலத்தின் போது சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை நிறுவனத்தால் பிடித்தம் செய்யப்பட்டு, அது வருங்காலத்தில் அவருக்கு வழங்கப்படும் தொகை அல்லது அவர்களுக்குத் தேவையான காலக்கட்டத்தில் அவர்களே பணத்தை எடுத்துக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது ஊழியர்களின் ஓய்வு காலத்தின் போது அந்த பிஎஃப் நிதியை பெறுவதை உறுதி செய்யும் திட்டமாகும். இது தனியார் மற்றும் அரசுத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து அவர்கள் பணியாற்றி வரும் நிறுவனத்தின் மூலம் தம் சம்பளத்தில் இருந்துகுறிப்பிட்ட தொகை கழிக்கப்பட்டு சில ஆண்டுகளுக்குப் பின் அதைப் பெற்றுப் பயன் பெறலாம். இது எத்தனை காலம் இருக்கிறதோ அதைப் பொருத்து இந்த இபிஎஃப் திட்டத்தில் ஊழியர்களின் பணத்தின் மீது வட்டியும் வழங்கப்பட்டு வருகிறது.

நாட்டில் பெரும்பாலான ஊழியர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற்று வரும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு இபிஎஃபில் பணம் செலுத்தியவர்கள் தங்கள் பணத்தை எடுப்பதற்கு சவாலான மற்றும் சிக்கலான நடைமுறைகள் இருந்தன. ஆனால் கொரோனா காலக்கட்டத்தில் ஊரடங்கு காலத்தில், பெருந்தொற்றினால் வேலைக்குச் செல்ல முடியாத சூழலில் பணியாளர்கள் தம் பிஎஃப் பணத்தை எடுக்க, மத்திய அரசு எளிய வழிமுறைகளை உருவாக்கியதால் கோடிக்கணக்கான ஊழியர்கள் பயனடைந்தனர்.

ஊழியர்களுக்கு ரூ.7 லட்சம் ஆயுள் காப்பீடு சலுகை

இந்த நிலையில், ஊழியர்களுக்கு ரூ.7 லட்சம் ஆயுள் காப்பீடு சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஒரு தனியர் மற்றும் அரசு நிறுவனத்தில் உள்ள ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு அது ஊழியர்களுக்கு என தனிப்பட்ட கணக்கில் இபிஎஃப்-ல் டெபாசிட் செய்யப்படுகிறது. இது பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, இந்த நிதியை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர சட்டம் 1952 – ன் கீழ் நிர்வகித்து வருகிறது.

இபிஎஃப்-ல் சேமிக்கப்படும் தொகைக்கு வங்கிகளில் வழங்கப்படும் விகிதங்களைவிட அதிக வருவாய் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிய மற்றும் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 6 கோடிக்கும் அதிகமான EPFO உறுப்பினர்களுக்கு ரூ.7 லட்சம் வரையிலான ஆயுள் காப்பீடுத் தொகையை உறுதி செய்யும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

EDLI திட்டத்தின் கீழ் காப்பீடு பலன்கள் தொடரும்

EDLI திட்டம் 1976 ல் தொடங்கப்பட்ட நிலையில் ஊழியர்கள் வருங்கால நிதி அமைப்பின் உறுப்பினர்களுக்கு காப்பீடு பலன்களை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் மூலம் எபிஎஃப்ஓ உறுப்பினர் இறந்தால், அவரது குடும்ப உறுப்பினர்கள் நிதிச் சிக்கல்களை எதிர்கொள்ளாமல் இருக்கவும், ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் குடும்பத்திற்கும் நிதிவழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகிறது. ’EDLI திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட காப்பீடு பலன்கள் தொடரும்’ என சமீபத்தில் தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News