Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸ் முலம் பிரபலம் ஆனாலும் பட வாய்ப்பு கிடைக்க ஒரு வருடமா.?
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் பலருக்கு வாழ்வளித்த பெருமை இந்த நிகழ்ச்சிக்கு உண்டு. ஏனென்றால் இதில் பங்கேற்ற பெரும்பாலானோர் தற்போது சினிமாத்துறையில் நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே ஹரிஷ் கல்யாண், ரைசா, ஜூலி போன்றோர் இந்த நிகழ்ச்சியிலிருந்து தான் பிரபலமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்ற பிரபலங்கள் புதிதாக படமொன்றில் இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி, ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
அதாவது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பல தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் டான்ஸ் மாஸ்டர் சாண்டியும், சித்தப்பு சரவணனும். இருவரும் பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்று நெருங்கிய நட்பு கொண்டிருந்தனர் என்பது நாம் அறிந்ததே.
ஆனால் சில காரணங்களுக்காக சரவணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் பலரை ஏமாற்றம் அடையச் செய்தது.
இவ்வாறிருக்க, தற்போது சாண்டி, சரவணன் மற்றும் ரேஷ்மா ஆகியோர் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் திரில் மர்டர் கதை களத்தைக் கொண்ட இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சந்துரு இயக்க இருக்கிறாராம். இந்தப் படத்தில் தான் சாண்டி கதாநாயகனாகவும், சித்தப்பு சரவணன், ரேஷ்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்க உள்ளார்களாம்.

bb3-cinemapettai
எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல விதங்களில் ரசிகர்களை மகிழ்வித்த சாண்டி மற்றும் சரவணன் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் இந்த படம் பலரிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
