பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வெளியேறியவர் நடிகை சுஜா வருணி. வெளிவந்த அவரை கமலின் முன்னிலையில் ரசிகர்கள் பலர் கேள்வி கேட்டனர். எந்த ஒரு கேள்விக்கும் தயக்கமோ மழுப்பலோ இல்லாமல் படார் படார் என்று பதிலளித்தார் சுஜா.

போட்டியிலிருந்து வெளியேறியவர் நேற்று ஒரு கடிதத்தை ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறார். அதில் முக்கியமாக கணேஷ் மற்றும் ஹரீஷ் இருவரை தவிர மற்றவர்கள் எல்லாம் உள்ளொன்று வைத்து புறமொன்று நடிப்பவர்கள் எனக் கூறியுள்ளார்.

மேலும் தன்னை மீம்ஸ் மூலம் கிண்டல் செய்தவர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். இந்த விளையாட்டில் நான் முழுமையாக விளையாடியதற்கு நீங்கள் சுயநலம் என்று பெயர் வைத்தால் நான் அதை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதோ அந்த கடிதம் உங்கள் பார்வைக்கு

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் தான் கட்டாயம் வருவதாக இதில் குறிப்பிட்டுள்ளார். விரைவில் வெளியேறிய அனைத்து பிரபலங்களையும் ஒருசேர பார்ப்போம்.