ரஜினியின் இந்திரன் திரைக்குவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றது தற்போது 2.௦ ரெடியாகி வருகிறது இதற்காக ரசிகர்கள் பேரிய எதிர்பார்போடு காத்துக்கொண்டு இருக்கின்றனர்.தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும் படம் ‘2.O’. பிரமாண்ட இயக்குதர் ஷங்கர் இயக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மேக்கிங் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு பெருத்த வரவேற்பைப் பெற்றது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வெளிவரும் எனக் கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் இந்தியா முழுவதும் 90% திரையரங்குகளில் இப்படம் தான் திரையிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  இளையதளபதி விஜய் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - சுவாரசிய தகவல்

இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் நம்பிக்கை இயக்குனர் நீரஜ் பாண்டே தான் இயக்கி வரும் ‘Aiyaary’ படத்தை தைரியமாக அன்றைய தினம் ரிலிஸ் செய்ய முடிவெடுத்துள்ளாராம். இந்தப் படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, மனோஜ் பாஜ்பாய், ரகுல் ப்ரீத் சிங் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  தெலுங்கில் பெரிய தொகைக்கு விலைபோன கபாலி

நீரஜ் பாண்டே தான் தோனியின் வாழ்க்கை வரலாற்றை படமாக ‘தோனி தி அன்டோல்டு ஸ்டோரி’ எனும் பெயரில் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுக்க ரசிகர்களின் எதிர்பார்ப்போடு களமிறங்கும் ‘2.O’வோடு நேரடியாக மோதும் படம் கரையேறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.’2.O’ படத்திற்கு டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்ப்பார்கள் என நினைக்கிறாரோ என்னவோ? முதலில் வெளியிடத் திரையரங்குகள் கிடைக்குமா என்பதே கேள்விக்குறிதான்.