சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் ஷூட்டிங் நேற்று முன் தினம் நிறைவடைந்தது. படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. படம் வெளியாகும் தேதியான ஆக்ஸ்ட் 10 மிக அருகே நெருங்கி வரும் நிலையில் ரசிகர்களின் பல்ஸ் அதிகரித்துள்ளது.

இப்படத்தில் அஜித்துக்கு இணையான வேடத்தில் நடித்துள்ள விவேக் ஓபராய் பற்றி பல செய்திகள் வந்தாலும் விவேகம் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.

சிவா சாருக்கும் அஜித் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள் என அவர் கூறியுள்ளார். மேலும் கவுண்டவுன் ஆரம்பித்துவிட்டது என உற்சாகத்துடன் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.