Tamil Cinema News | சினிமா செய்திகள்
எம் எஸ் பாஸ்கரின் மகனை தொடர்ந்து விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் திண்டுக்கல் லியோனின் மகன். போட்டோ உள்ளே .
சேதுவை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி. மேலும் மக்கள்செல்வன் என்ற தலைப்பை சேதுவுக்கு அளித்ததும் சீனு ராமசாமி தான். அவர் எப்போது அழைத்தாலும் கதையோ, சம்பளமோ கேட்காமல் நடிக்க கிளம்பி போய்விடுவேன் என்பது விஜய் சேதுபதி சொல்லும் ஓபன் ஸ்டாட்மென்ட்.

YSR films
மாமனிதன்
யுவனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம். இசைஞானி இளையராஜா இசை மற்றும் யுவன் அமைக்கிறார்கள். ஹீரோயினாக காயத்ரி நடிக்கிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சூப்பர் டீலக்ஸ் சீதக்காதி, ஆகிய படங்களை தொடர்ந்து 7வது முறையாக இப்படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்.

Leo Sivakumar – Seenu Ramasamy
இந்நிலையில் பட்டிமன்ற பேச்சாளரும், நடுவருமான திண்டுக்கல் லியோனியின் மகன் சிவகுமார் இப்படத்தின் வாயிலாக நடிகர் அவதாரம் எடுக்கிறார். இதனை இயக்குனர் தன ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
#மாமனிதன் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகும் தம்பி லியோ சிவக்குமார்.திறன்மிகு கலைஞர்.இவர் நாடறிந்த பேச்சாளர் திரு.லியோனி அவர்களின் புதல்வர்.முறைப்படி எங்கள் நடிகர்கள் தேர்வில் பங்குபெற்று படத்தில் நடிக்கின்றார். pic.twitter.com/HEsxbbJd8G
— Seenu Ramasamy (@seenuramasamy) January 8, 2019
