News | செய்திகள்
ஆஸ்கர் விருதை மறந்து சென்று டிகாப்ரியோ
டிகாப்ரியோவிற்கு எப்படா ஆஸ்கர் கிடைக்கும் என கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்கள் நினைத்தது போலவே சில தினங்களுக்கு முன் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றார்.
ஆனால், விருது விழா முடிந்து ஒரு ஹோட்டலில் விருந்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது அனைவருடன் டிகாப்ரியோ பாட்டு பாடி நடனமாடி கலக்கியுள்ளார்.
இதை தொடர்ந்து இவர் ஆஸ்கர் விருதை மறந்து விட்டு காரில் ஏறிவிட்டார், பின் உதவியாளர் ஒருவர் இந்த விருதை எடுத்து வந்து அவரிடம் கொடுத்துள்ளார்.
