லியோனார்டோ டாவின்சி

Leonardo Da Vinci Monalisa

லியொனார்டோ டா வின்சி புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். இவர் பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். “கடைசி விருந்து” (The Last Supper), “மோனா லிசா” (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.

The Last Supper

எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் எழுதிய ‘டா வின்சி’யின் சுயசரிதை புத்தகத்தை தழுவி படமாக எடுக்க முடிவு செய்துள்ளது ‘பராமௌன்ட் பிக்ச்சர்ஸ்’.

லியானர்டோ டிகாப்ரியோ

leonardo dicaprio

இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு லியானர்டோ டிகாப்ரியோவிடம் சென்றுள்ளது. ‘ தி ரெவெனன்ட்’ படத்திற்காக டிகாப்ரியோ ஆஸ்கார் விருது பெற்றார். அதன் பின் இவர் எந்த படமும் நடிக்க வில்லை. இயக்குனர் குவன்டைன் டாரண்டினோ படத்தில் நடிக்க உள்ளார். அந்த படம் முடிந்ததும் இதில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பராமௌன்ட் பிக்ச்சர்ஸ்

இனிநிறுவனம் இந்தப் படத்துக்கான ஸ்க்ரிப்ட் எழுதும் வேலையை ஜோன் லோகனிடம் ஒப்படைத்திருக்கிறது. இவர் தான் ‘கிளாடியேட்டர்’, ‘த ஏவியேட்டர்’, ‘ஸ்கைஃபால்’, ‘ஸ்பெக்டர்’ போன்ற பல படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படம் பற்றிய மற்ற தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

the revanant

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

தான் கர்ப்பமடைந்த வேலையில் இத்தாலியில் உள்ள அருங்காட்சியகத்தில் டா வின்சியின் ஓவியத்தை ரசித்துக் கொண்டிருந்த பொழுது தான் குழந்தை முதல் முறையாக உதைத்துள்ளது. எனவே தான் தன் குழந்தைக்கு லியோனார்டா டிகாப்ரியோ என்று பெயர் வைத்துள்ளார் அந்த தாய். எனவே இந்த படம் நம் ஹீரோவுக்கு மிகவும் சென்டிமெண்டானதாக தான் இருக்கும்.