Leo Leaked: பொதுவாக தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் சில இணையதளங்கள் படம் வெளியாவதற்கு முன்பே HD பிரிண்ட் உடன் இணையத்தில் வெளியிட்டு விடுகிறார்கள். சாதாரண நடிகர்கள் மட்டுமன்றி பெரிய நடிகர்களின் படங்களுக்கும் இந்த நிலைமைதான் இருந்து வருகிறது.
அந்த வகையில் லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் இன்று லியோ படம் வெளியாகி உள்ளது. ஆனால் இதற்கு முன்னதாக நேற்று லியோ படத்தின் ஆரம்பக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி விட்டது. அதாவது லியோ படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லோகேஷ், ரசிகர்கள் முதல் 10 நிமிட காட்சியை தவற விட்டு விடாதீர்கள் என்ற ஒரு கோரிக்கை கொடுத்திருந்தார்.
அதாவது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் அந்த காட்சிக்காக உழைத்து உள்ளோம். மேலும் சிஜி வேலைகளும் மிகுந்த மெனக்கெட்டு செய்துள்ளதாக கூறியிருந்தனர். ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே அந்த காட்சி இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து விட்டது. அதாவது விஜய் ஹைனா உடன் சண்டை போடும் காட்சி தான் அது.
அதுவும் தியேட்டரில் பார்ப்பது போல் HD தரத்தில் அந்த காட்சி வெளியாகி இருப்பது படகுழுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லியோ படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்று தயாரிப்பாளர் கணக்கு போட்டு வைத்திருந்தார். அவர் தலையில் இடியை இறக்கும் படியாக லியோ முழுவதும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆகையால் தியேட்டரில் ரசிகர்கள் படம் பார்ப்பது குறைய கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் லியோ படத்தின் டிக்கெட் விலை அதிகமாக விற்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் இப்போது கையில் இருக்கும் மொபைல் ஃபோனிலேயே படத்தை பார்த்து விடலாம் என்று ரசிகர்களுக்கு எண்ணம் வர அதிக வாய்ப்பு இருக்கிறது.
தமிழக திரையரங்குகளில் லியோ படம் வெளியாவதற்கு முன்பே சட்ட விரோதமாக வெளியான இப்படத்தின் ஆரம்பக் காட்சிகளை செல்போன் மூலம் படம் எடுத்து இணையத்தில் லீக் செய்யப்பட்டவர்கள் உடனடியாக நீக்க படக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் விரோதமாக லியோ காட்சிகளை வெளியிட்டவர்கள் மீது வழக்கு தொடரவும் வாய்ப்பு இருக்கிறது.