சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

படம் சுமார்தான் ஆனா வசூல் மட்டும் பட்டைய கிளப்புது எப்படி.? லியோ மிரட்டும் 6வது நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Leo Movie Collection Report: கடந்த 19ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் வெளியாகி வசூலில் பின்னி பெடல் எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த படம் சுமார் தான் ஆனா வசூலில் மட்டும் பட்டையை கிளப்புவது எப்படி என்று பலரும் மண்டையை பிச்சுக்கிறாங்க. அதிலும் இப்போது லியோவின் ஆறாவது நாள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

தொடர் விடுமுறை நாட்கள் ஆன பூஜா ஹாலிடேசில் எல்லோரும் தளபதியை திரையரங்கில் பார்த்துக் கொண்டாட வேண்டும் என குவிந்தனர். இதனால் தியேட்டர்களெல்லாம் ஹவுஸ் புல் ஆனது. அதேசமயம் லியோ படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்டுகள் சோசியல் மீடியாவில் குவிந்தாலும், அதன் வசூலில் மட்டும் எந்த பங்கமும் ஏற்படவில்லை. 6 நாளில் உலக அளவில் லியோ ஒட்டு மொத்தமாக 400 கோடியை பாக்ஸ் ஆபிஸில் குவித்திருக்கிறது.

முதல் நாளில் 148.5 கோடியை வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் சற்று சரிவை சந்தித்து 65 கோடியை வசூலித்து, அடுத்தடுத்த நாட்களில் தொடர் விடுமுறையை சாதகமாக பயன்படுத்தி வசூலில் சக்கை போடு போடுகிறது.

நான்காவது நாளில் 45 கோடியை குவித்த லியோ, ஐந்தாவது நாளில் மட்டும் 70 கோடியை வசூலித்து தற்போது ஆறாவது நாளில் ஒட்டு மொத்தமாக 400 கோடியை வசூலித்திருக்கிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 21.50 கோடியையும், கேரளாவில் 5 கோடியையும், கர்நாடகத்தில் 3.60 கோடி வசூலை அள்ளி குவித்திருக்கிறது.

ஆனால் இந்த படம் ஆறு நாளில் 500 கோடியை தாண்டி விட்டதாக சில மாபியா கும்பல் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் இப்போதுதான் 400 கோடியை கடந்து இருக்கிறது. அது மட்டுமல்ல தயாரிப்பு நிறுவனமும் முதல் நாள் வசூலை தவிர மற்ற நாட்களின் லியோ படத்தின் கலெக்ஷனை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிடவில்லை.

அவர்கள் தெரிவித்தால் மட்டுமே லியோ படத்தின் வசூல் 500 கோடியை தாண்டி விட்டது என்பதை நம்ப முடியும். ஆனால் இப்போது வரை லியோ 400 கோடியை மட்டுமே வசூலித்து இருக்கிறது. இனிவரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் கொஞ்சம் கொஞ்சமாக சரிவை நோக்கி தான் செல்லும். ஏனென்றால் விடுமுறை நாட்கள் என்பதால் லியோ தப்பித்தது. ஆனால் இதற்கு மேல் 500 கோடியை தொடுவதெல்லாம் கஷ்டம் தான்.

- Advertisement -

Trending News