உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது என்பதை உடைத்து எறிந்த லியோ.. முதல் நாளில் ஜெயிலரை விட டபுள் மடங்கு கலெக்சன்

Jailer-Leo: லியோ படத்தின் ஃபீவர் தான் இப்போது ரசிகர்களுக்கு இருக்கிறது. அதாவது லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் வருகின்ற வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் இதுவரை ஜெயிலர் படம் 650 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

இந்த படத்திற்கு முன்னதாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் தான் 500 கோடிக்கு அதிகமாக வசூல் செய்தது. ஆகையால் ஜெயிலர் வசூலை லியோ படம் முறியடிக்குமா என்ற பேச்சு போய்க்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் லியோ படத்தின் முதல் நாள் வசூல் விவரம் தோராயமாக வெளியாகி இருக்கிறது.

அதாவது ரஜினியின் ஜெயிலர் படம் முதல் நாளில் 50 கோடி வசூல் செய்திருந்தது. மேலும் இப்படத்தின் ஆடியோ லான்சில் ரஜினி பேசும் போது உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது என்பது போல ஒரு கதை சொல்லி இருந்தார். ஆனால் இப்போது ஊர் குருவியும் பருந்தாகும் என்பதை நிரூபித்து உள்ளது லியோ படத்தின் முதல் நாள் கலெக்சன்.

அதாவது லியோ படம் ஆயிரம் கோடி தாண்டி வசூல் செய்யும் என்று நினைத்த நிலையில் முதல் நாளை 100 கோடியை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதுவும் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் நாளே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமை லியோ படத்திற்கு கிடைக்க இருக்கிறது. அதுவும் வெளிநாடுகளில் தான் லியோ படத்திற்கு அதிக வசூல் வரவுள்ளது.

பொதுவாக விஜய்யின் படங்களுக்கு எப்போதுமே வெளிநாடுகளில் அதிக வரவேற்பு இருப்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அதுவும் ரஜினி, அஜித்தை ஒப்பிடும் போது விஜய்க்கு ஏக போக ரசிகர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். இதன் காரணமாக வெளிநாடுகளில் லியோ படம் முதல் நாளில் கிட்டத்தட்ட 60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் தமிழ்நாட்டை காட்டிலும் லியோ படத்திற்கான வசூல் வேட்டைக்கு காரணமாக இருப்பது வெளிநாடு வசூல் தான் என்று கூறப்படுகிறது. எனவே ஜெயிலரை விட முதல் நாளே டபுள் மடங்கு வசூலை லியோ படம் பெற இருக்கிறது. இதன் மூலம் ரஜினி சொன்ன காக்கா, பருந்து கதைக்கு சரியான பதிலடியை லியோ வசூல் மூலம் விஜய் கொடுக்க இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்