வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

லியோ படத்தின் FDFS டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?. கொள்ளையடிக்கும் ஐமாக்ஸ்

Leo FDFS Ticket Price: நடிகர் விஜய் நடித்த லியோ படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதுவரை எந்த படங்களுக்கும் இல்லாத அளவிற்கு இந்த படத்திற்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு காரணம் விஜய் ரசிகர்கள் மற்றும் படத்தின் மீதான ஹைப் தான். மேலும் இயக்குனர் லோகேஷ் கணகராஜ் இந்த படத்திற்காக நிறைய பிரமோஷன்களும் செய்து வருகிறார்.

சமீபத்தில் ரிலீசான படங்களைப் போலவே தளபதி விஜய் நடித்த லியோ படத்திற்கும் அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் சென்னையில் நேற்று ஒரு சில திரையரங்குகளில் மட்டும்தான் ப்ரீ புக்கிங் ஆரம்பித்திருக்கிறது. மற்ற தியேட்டர்களில் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. இது விஜய் ரசிகர்களுக்கு இடையே பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.

புக் மை ஷோ என்ற ஆப்பில் மட்டும் அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே ஷேரிங் விஷயத்தில் இன்னும் விவாதம் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். இந்த பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு வந்த பிறகு இன்று அல்லது நாளை தமிழ்நாட்டில் எல்லா தியேட்டர்களிலும் ப்ரீ புக்கிங் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் லியோ படத்தை பற்றி பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் பெங்களூர் தியேட்டர் ஒன்றில் லியோ படத்தின் முதல் காட்சிக்கு அட்வான்ஸ் புக்கிங் செய்வதற்கு முயற்சி செய்து, டிக்கெட் விவரங்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து புகைப்படமாக பதிவிட்டதுடன், ரசிகர்களுக்கு அறிவுரையும் சொல்லி இருக்கிறார்.

அந்த ஐமாக்ஸ் தியேட்டரில் லியோ படத்தின் FDFS காட்சிக்கு 2300 இல் இருந்து 2500 வரை டிக்கெட் விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒரு படம் பார்க்க 2500 ரூபாய் செலவிடுவதற்கு நன்றாக சாப்பிடுங்கள் அல்லது உங்கள் கடன் எதையாவது திருப்பிக் கொடுங்கள், உங்களுக்காக நல்ல அழகான துணியை எடுத்துக் கொள்ளுங்கள், 2500 ரூபாயை வேஸ்ட் செய்யாதீர்கள் என ப்ளூ சட்டை மாறன் சொல்லி இருக்கிறார்.

லியோ படத்தின் டிக்கெட் விலைக்கும் சேர்த்து நிறைய நிபந்தனைகள் போடப்பட்டிருக்கிறது. இருந்தாலும் இது போன்று ஒரு சில தியேட்டர்கள் இதுதான் சமயம் என இஷ்டத்திற்கு விலையை ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தான் ஒன்று சேர்ந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும். ஒரு படத்திற்கு 2500 டிக்கெட் என்பதெல்லாம் கொள்ளையடிக்கும் விதமாகத்தான் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Trending News