லோகேஷ்-க்கு கரும்புள்ளியாக அமைந்த லியோ.. தேவையில்லாத ஆணிகளாக அமைந்த 6 பரிதாபங்கள்

Lokesh In Leo Movie: தற்போது எங்கு பார்த்தாலும் ஆர்ப்பரித்து கொண்டிருப்பது லியோ படம் தான். பல மாதங்களாக வழி மீது விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்த லியோ நேற்று ரிலீசாகி திரையரங்குகளில் திருவிழா மாதிரி கொண்டாடப்பட்டது. அதற்கு காரணம் லோகேஷின் சஸ்பென்ஸ் ஆன கதையும், விஜய்யின் வெறித்தனமான நடிப்பையும் பார்ப்பதற்கு.

அந்த வகையில் ரசிகர்கள் அனைவரையும் லியோ படம் திருப்தி படுத்தியதா என்று கேட்டால் அது கேள்விக்குறியாக இருக்கிறது. அதாவது படம் பார்க்க ஆரம்பத்தில் நல்லா தான் இருக்கு. ஆனால் போகப் போக கழுத கெட்டு கட்டெறும்பாக தேய்வது போல படத்தில் நிறைய காட்சிகள் இருக்கிறது. முக்கியமாக இந்த படத்திற்கு இவர்கள் எல்லாம் தேவையே இல்லை என்று சொல்லும்படியான ஆறு கேரக்டர்கள் அமைந்திருக்கிறது.

அதில் நெப்போலியன் கேரக்டரில் நடித்த ஜார்ஜ் மரியன். இவர் எதற்கு தமிழ்நாட்டிலிருந்து போலீஸ் பாதுகாப்புக்காக வருகிறார் என்பது தெளிவாக இல்லாமல் ஏதோ சும்மா வைக்கணும் என்ற பெயருக்கு இருந்தது போல் தெரிகிறது. அடுத்ததாக லியோவின் நண்பராக இருக்கும் அனுராக் கொல்லப்படுகிறார். இந்த சீன் அங்க தேவையே இல்லாத போல் இருக்கிறது.

அதாவது 30 செகண்ட் தான் வருகிறார். வந்ததுமே இறந்து போகிற மாதிரி ஒரு சீன். இது ரொம்பவே வேஸ்ட் கேமியோ தோற்றத்தில் வந்தது போல் தெரிகிறது. அடுத்ததாக தாஸ் மற்றும் பிரதர்ஸ் இதில் கிறிஸ்டியனாக இருந்துட்டு படத்துல ஆடு, மாடு, மனுஷங்களை கூட பலி கொடுக்கிறது கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத மாதிரி இருக்கிறது.

அடுத்ததாக விஜய் பையனாக இதில் நடிச்ச மேத்யூ தாமஸ் கொஞ்சம் கூட இதில் கனெக்ட் ஆகவில்லை. அடுத்து கௌதம் மேனன் கேரக்டர் பரவாயில்லை, ஆனால் இன்னுமே கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம். இதுல இவருடைய மனைவி என்று பிரியா ஆனந்த் நடிச்சது சுத்த வேஸ்ட். இதில் இவருடைய கேரக்டர் தேவையே இல்லாத போல் இருந்தது.

இதனை அடுத்து த்ரிஷாவுக்கும் விஜய்க்கும் ரொமான்ஸ் ரொம்பவே கம்மியாக இருந்தது. அதுவும் அந்த லிப் லாக் சின் செட்டாகவில்லை. ஒரு ரொமான்ஸ் வைக்கணும் என்ற பெயருக்கு வச்சது போல் பார்ப்பவர்களுக்கு அப்பட்டமாக தெரிகிறது. இதுல டார்க் காமெடி வச்சது அந்த அளவுக்கு ஒர்த்தாக இல்லை. முதல் பாதி இருக்கிற அளவுக்கு இரண்டாம் பாதி இல்லாமல் மொத்தமாக சொதப்பி விட்டு இருக்கிறார். ஆக மொத்தத்தில் லோகேஷ் கேரியருக்கு லியோ படம் கரும்புள்ளியாக அமைந்துவிட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்