fbpx
Connect with us

Cinemapettai

ராதாரவியை மட்டமாக பேசும் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் யோக்கியமா என பிரபல இயக்குனர் கேள்வி?

ratha ravi-nayanthara

News | செய்திகள்

ராதாரவியை மட்டமாக பேசும் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் யோக்கியமா என பிரபல இயக்குனர் கேள்வி?

ராதாரவியை மட்டமாக பேசும் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் யோக்கியமா என பிரபல இயக்குனர் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் கொலையுதிர் படத்தின் விழாவில் கலந்துகொண்ட ராதாரவி நயன்தாராவை பற்றி இரட்டைஅர்த்தமுள்ள வார்த்தைகள் பேசினார்.

அதற்கு பல சினிமா பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். ஏன் ராதாரவியின் தங்கையான ராதிகாவும் கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் விஷால் அவர்களுக்கு மேலும் ஒரு படி சென்று ராதாரவியின் உள்ள முதல் வார்த்தையை ராதா தூக்கி விட்டு வெறும் ரவி என்ற பெயரை மாற்றிக் கொள்ள வேண்டுமென கருத்து தெரிவித்தார்.

இப்படி பலரும் பேசி வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பட இயக்குனர் லெனின் பாரதி ராதாரவி பேசிய வார்த்தையை பற்றி கூறியுள்ளார்.அதில் சினிமாவில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் யோக்கியமா என கேள்வி எழுப்பியுள்ளார். ராதாரவி நயன்தாராவைப் பற்றி இரட்டை அர்த்தமுள்ள வசனம் வைத்து பேசினார்.

ஆனால் லெனின் பாரதி விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவை வைத்து “ நான் உங்களை போடணும் சார் ” எனும் வசனம் பார்த்திபனை பார்த்து பேசுவார். அந்த வசனத்தை வைத்து கைதட்டல் மற்றும் சினிமாவில் சம்பாதித்த இவர்கள் ராதாரவியை பற்றியும் அங்கு கைத்தட்டல் கொடுத்த பார்வையாளர்கள் பற்றி பேசுவதற்கு இவர்கள் தகுதி இல்லை என கூறியுள்ளார்.

பின்பு இவர்களை நேரடியாக பாதிப்பதால் ராதாரவி மீது கண்டனம் தெரிவிப்பது குற்றம் என லெனின் பாரதி தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top