கடந்த சில நாட்களாகவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு போறாத காலம் தான். ஐசிசி விதிமுறையை மீறி பந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரும் விவாத களமாகிவிட்டது. கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது டிவியில் லைவ் ஆக பார்க்கப்பட்ட ஒன்று. பத்திரிகையாளர் சந்திப்பில் பான்கிராப்ட் மற்றும் ஸ்மித் தவறை ஒத்துக்கொண்டாலும், முன்னுக்கு பின் முரனாக்க பல பொய்களை கூறினார்கள். விசாரித்த ஐசிசி குழு ஸ்மித்துக்கு ஒரு போட்டி விளையாட தடையும் பான்கிராப்ட்டுக்கு 3 டீ- மெரிட் புள்ளிகள் அளித்தது.

எனினும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது விசாரணையை தொடங்கியது. முதல் கட்டமாக ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் உடனடியாக தென்னாப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்ப உத்தரவு இட்டது . பந்து சேதப்படுத்துவது குறித்து முன்னரே அவர்களுக்கு தெரியும். மற்ற வீரர்களுக்கு, பயிற்சியாளர்களுக்கு இது பற்றி தெரியவில்லை என்றும் கூறினார்கள்.

அதிகம் படித்தவை:  ராகவா லாரன்சின் அடுத்த படத்தில் ‘பாகுபலி’ கனெக்சன்
smith bancroft warner

மேலும் தண்டனையாக தலைவர் ஸ்மித் மற்றும் துணை தலைவர் வார்னருக்கு 12 மாத தடையும், பாங்க்ராப்ட் அவர்களுக்கு 9 மாத தடையும் விதித்துள்ளது. மேலும் வார்னர் தன் வாழ்நாள் முழுவதும் கேப்டன் ஆக முடியாது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

இத்துடன் இந்த சம்பவம் முடிந்தது என்று நினைத்து வந்த வேலையில் பயிற்சியாளர் லேமன், இந்த தொடர் அதாவது நான்காவது போட்டி முடிந்ததும் தன் பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் “என் குடும்பத்தாரிடம் பேசிய பின் எடுத்த முடிவு இது. ஆஸ்திரேலிய சிரஸிகேட் தலைமயிடமும் இது பற்றி பேசிவிட்டேன். அணியில் இருந்து விளக்குவதற்கு இதுவே சரியான தருணம். இந்த டீம் இதில் இருந்து மீண்டு வரும். ஆஸ்திரேலிய மக்கள் அவர்களை மன்னித்து மீண்டும் சப்போர்ட் செய்ய வேண்டும். இந்த அணி வீரர்களுக்கு குட்- பை சொல்வதற்கு மிகவும் சிரமமாக தான் உள்ளது.” என்று கூறியுள்ளார்.