ஓகே சொன்ன ஆண்ட்ரியா, ரிலீஸ் தேதி நோட் பண்ணிக்கோங்க.. அடுத்த பட அப்டேட் கொடுத்த லெஜெண்ட் சரவணா

Legend Saravana: சென்னை மாநகரின் அடையாளமாக இருக்கும் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் சரவணன் கடந்த ஆண்டு லெஜன்ட் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் ஓரளவுக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்றிருந்தாலும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதன் பின்னர் சரவணன் நடிப்பதா இல்லை என ஏகப்பட்ட வதந்திகள் வந்து கொண்டிருந்த நேரத்தில் தொடர்ந்து நடிப்பேன் என அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அது மட்டும் இல்லாமல் நல்ல கதைக்காக காத்திருக்கிறேன் எனவும் சில பேட்டிகளில் சொல்லியிருந்தார்.

அடுத்த பட அப்டேட் கொடுத்த லெஜெண்ட் சரவணா

லெஜெண்ட் சரவணா எதிர்பார்த்த கதையுடன் அவரை திருப்திபடுத்தி இருக்கிறார் இயக்குனர் துரை செந்தில்குமார். கருடன் படம் மூலம் நடிகர் சூரியை வேறொரு பரிமாணத்தில் காட்டியவர் தான் இந்த துரை செந்தில்குமார்.

கருடன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இவர் லெஜெண்ட் சரவணாவுடன் இணைந்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முதல் கட்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இதை தொடர்ந்து தற்போது தூத்துக்குடியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதாக லெஜன்ட் சரவணா அறிவித்திருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா மற்றும் நடிகர் சாம் முக்கிய கேரக்டர்களின் நடித்திருக்கிறார்கள். நடிகை பாயல் ராஜ் புட் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இது ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படம் என்று சொல்லி இருக்கிறார் ஹீரோ சரவணன்.

மேலும் இந்த படத்தை வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் தகவல் தெரிவித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பத்திரிகையாளர்கள் கேட்ட நிறைய கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்து இருக்கிறார் லெஜன்ட் சரவணா.

நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து கேட்டபோது இவ்வளவு நாள் விஜய் தேடி ரசிகர்கள் வந்தார்கள். தற்போது விஜய் அவருடைய ரசிகர்களை தேடி போக இருக்கிறார் என்று பதில் அளித்திருக்கிறார். மேலும் சினிமா துறையில் நடைபெறும் வன்கொடுமை குற்றங்களுக்கு தீர விசாரணை செய்து தண்டனை கொடுப்பது மிகவும் முக்கியம் எனவும் லெஜெண்ட் சரவணா பேசியிருக்கிறார்.

தன்னுடைய முதல் படம் தோல்வி படம் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்னை பொறுத்த வரைக்கும் என்னுடைய முதல் படம் பெரிய வெற்றி படம். இந்த இரண்டாவது படம் அதைவிட பெரிய வெற்றி படமாக அமையும் என பத்திரிகையாளர்களிடம் பேசி இருக்கிறார் லெஜன்ட் சரவணா.

- Advertisement -spot_img

Trending News