சினிமாவில் நுழையும்போது உஷாராக இருக்கும் அண்ணாச்சி.. கையிலெடுக்கும் அஸ்திரம்!

தன்னுடைய சொந்த கடை விளம்பரத்தில் முன்னணி நடிகைகளுடன் சேர்ந்து தானே நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அண்ணாச்சி அருள். ஆசை யாரை விட்டுச்சு விளம்பரத்தில் ஏகப்பட்ட விமர்சனத்தை பெற்றாலும் வெகு சீக்கிரமே பிரபலமானதால் விளம்பரத்திற்காக நடிக்கத் துவங்கிய அருள் அண்ணாச்சி, அதன் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார்.

இவர் நடிப்பில் உருவாகும் தி லெஜெண்ட் படத்தை பிரபல சீரியல் இரட்டை இயக்குனர்களான ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள்தான் ஏற்கனவே இவரின் கடையின் விளம்பரத்தையும் இயக்கினார்கள். சரவணன் அண்ணாச்சியின் தி லெஜெண்ட் படத்தின் டிரைலர் ரிலீசாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பிரம்மாண்ட காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் எடுத்திருக்கிறார்கள் ஜெடி அண்ட் ஜெர்ரி கம்பெனி. ட்ரெய்லரில் வெளிவந்த ஒவ்வொரு காட்சிகளும் பிரம்மாண்டம். சரவணன் அண்ணாச்சி ஒவ்வொரு பிரேமிலும் அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தில் அண்ணாச்சி தனது சொந்த குரலில் பேசி இருக்கிறார்.

என் குரல் தான் மக்களிடம் சேர வேண்டுமென்ற ஒரு எண்ணம் அவரிடம் இருந்து வருகிறது. நமக்கு வேறு யாராவது ஒருவர் டப்பிங் பேசினால் காலம் முழுவதும் அவரிடமே நாம் தொங்க வேண்டும். அதனால் அதில் விருப்பம் இல்லாத அண்ணாச்சி சொந்தக் குரலில்தான் நடிக்க வேண்டும் என்று கறாராக சொந்த குரலிலே டப்பிங் பேசி விட்டாராம்.

அது ஒரு நல்ல விஷயம் தான். சினிமாவிற்கு நுழையும்போதே இவ்வளவு தெளிவாக இருப்பது அவசியம் தான். ஏனென்றால் சினிமா துறையில் மோகன் கடைசி வரை அடுத்தவர் குரலுக்காக காத்துக்கொண்டிருந்தார் என்றே கூறலாம். மோகனுக்கு கடைசிவரை குரல் கொடுத்தவர் எஸ் என் சுரேந்தர்.

தி லெஜெண்ட் படத்தில் சரவணா ஸ்டோர்ஸ்  அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, இமயமலை மற்றும் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது.

Next Story

- Advertisement -