Tamil Cinema News | சினிமா செய்திகள்
சால்ட் அன்ட் பெப்பர் லுக்குக்கு குட் பை சொல்லிய தல ! லீக் ஆனதா விசுவாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ ?
விசுவாசம்
தல அஜித் மற்றும் இயக்குனர் சிவா இணையும் நான்காவது படம் விசுவாசம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு. வெற்றி ஒளிப்பதிவு, இமான் இசை. ஹீரோயினாக நயன்தாரா, காமெடிக்கு யோகி பாபு, ரோபோ ஷங்கர். படத்தை பற்றிய பல தகவல்கள் கிசு கிசுக்கப்பட்டாலும், சில நாட்களாகவே எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் திங்கள் அன்று அதாவது மே 7 ஹைதராபாதில் தொடங்குகிறது என்று தகவல்கள் வெளியாகின.

Ajith S Thaman
அதே போல் நேற்று முன் தினம் சென்னை ஏர்போர்ட் இல் அஜித் காணப்பட்டார். மேலும் தமன் அஜித் அவர்களுடன் ஹைதராபாத் ஏர்போட்டில் எடுத்த போட்டோவையும் வெளியிட்டார்.

Nayanthara
மேலும் நயன்தாரா ஏர் போர்ட் ஸ்டாப்புடன் எடுத்துக்கொண்ட போட்டோவும் இணையத்தில் வெளியானது.
One of the most expected Tamil movies – #Thala #Ajith 's #Viswasam shoot started in Hyderabad today..
VISWASAM ACTION BEGINS pic.twitter.com/eG5c7wylQ0
— Ramesh Bala (@rameshlaus) May 7, 2018
இந்நிலையில் முதல் மூன்று நாட்கள் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பாடல் ஷூட்டிங் தான் நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகின. பின்னர் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ என்று இந்த போட்டோ ட்விட்டரில் வெளியானது.

Visuvasam
இரவு நேரத்தில் திருவிழா போன்ற செட் அமைப்பில் பாடல் காட்சி போல தோன்றியது அது. எனினும் அது விசுவாசம் தானா என் தெளிவாக இல்லை. இந்நிலையில் அந்த போட்டோவை ஜூம் செய்து , இது அஜித் ஆன், மேலும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை மாற்றிவிட்டார் என்றும் அவர் ரசிகர்கள் ஷேர் செய்தனர்.

Visuvasam
இது ஒரு புறம் இருக்க, சிலரோ ப்ளீஸ் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை இது போல ஷேர் செய்ய வேண்டாம், . எப்படியும் இயக்குனர் சிவா தன் செண்டிமெண்ட் ஆன வியாழன் அன்று அதிகாரபூர்வமாக வெளியிடுவார், அதுவரை காத்திருப்போம் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.
