திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

ஒரு போஸ்ட்க்கு 100 ரூபாய்.. இணைய கூலிப்படை செய்த வேலை, ஸ்க்ரீன் ஷாட்டுடன் மாட்டிய பிக்பாஸ் விஷப்பூச்சி

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியதால் இப்போது சுவாரசியமும் விறுவிறுப்பும் கலந்து செல்கிறது. அதிலும் நீண்ட நாட்களாக ரசிகர்களுக்கு இருந்த ஒரு சந்தேகம் தற்போது வெளியாகி இருக்கும் ஆதாரம் மூலம் உறுதியாகி இருக்கிறது.

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் வெறுக்கப்படும் போட்டியாளர் என்றால் அது மாயா தான். எப்போதோ வீட்டை விட்டு வெளியேறி இருக்க வேண்டியவரை விஜய் டிவியும் கமலும் சேர்ந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் மாயா வெளியில் தனக்கென ஒரு பி.ஆர் டீமை வைத்து சப்போர்ட் செய்ய சொல்லி இருக்கிறார் என்ற சந்தேகமும் இருந்தது. அதன்படி தற்போது மாயாவுக்கு ஆதரவாக ஒரு போஸ்ட் போட்டால் நூறு ரூபாய் தருகிறோம் என பேரம் பேசப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

Also read: 12 லட்சம், ஆசை காட்டும் பிக்பாஸ்.. தடுமாறும் ஹவுஸ் மேட்ஸ், பணப்பெட்டியை தூக்கியது இவர்தான்

அந்த ஸ்கிரீன் ஷாட் தற்போது வெளியாகி இருக்கும் நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது. அதாவது பிக்பாஸ் யார் வெளியில் டி ஆர் டீம் வைத்துள்ளதாக நினைக்கிறீர்கள்? என கேட்டிருந்தார். அதற்கு ஒட்டு மொத்த பேரும் அர்ச்சனாவை தான் கைகாட்டினார்கள்.

இதனால் ஆவேசமடைந்த அச்சு பொங்கி எழுந்து காசு இருந்தா நான் ஏன் இந்த ஷோக்கு வர போறேன் என கூறினார். அதைத்தொடர்ந்து பெரும் பிரளயமே வீட்டுக்குள் நடந்தது. இதில் மாயா, பூர்ணிமா இருவரும் அர்ச்சனாவை சமாதானம் செய்து கொண்டிருந்த காட்சிகளும் சோஷியல் மீடியாவில் ஒளிபரப்பாகி வருகிறது.

maya-bb
maya-bb

கடைசியில் சாத்தான் வேதம் ஓதுவது போல மாயாவின் வண்டவாளம் வெளிவந்துள்ளது. அந்த ஸ்கிரீன் ஷாட் இப்போது வைரலாகி வரும் நிலையில் சேனல் தரப்பு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.

Also read: இதுக்கு மேலயும் பிக்பாஸ்ல குப்ப கொட்ட முடியாது.. 16 லட்சத்தோடு நடையை கட்டிய பீனிக்ஸ் பறவை

- Advertisement -spot_img

Trending News