Tamil Cinema News | சினிமா செய்திகள்
இணையதளத்தில் லீக் ஆன தனுஷ் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்.. அதிர்ச்சியில் படக்குழு
தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படம் 100 நாட்களை தாண்டி மக்களிடையே அசுரத்தனமான வெற்றியைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் தனுஷ் வயதான தோற்றத்தில் தத்துரூபமாக நடித்திருப்பார். தனுசுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
வெற்றிமாறனின் மாறுபட்ட இந்த கதைக்களம் தனுஷ் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. கௌதம் மேனன் இயக்கத்தில் வெகு நாட்களாக கிடப்பில் இருந்து வெளிவந்த எனை நோக்கி பாயும் தோட்டா தனுசுக்கு கடந்த வருடத்தில் பெரும் தோல்வியை ஏற்படுத்தியது.
சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தனுஷின் அடுத்த படமான கர்ணன் பட பூஜை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த படத்தை பரியேறும்பெருமாள் படத்தை இயக்கிய மாரிசெல்வராஜ் தான் இயக்குகிறார்.
இந்த படத்திற்கு வரலாற்று சிறப்புமிக்க கொடைவள்ளல் பெயரான கர்ணன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்காக சிவாஜியின் அறக்கட்டளை மூலம் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த படத்தில் யோகி பாபு காமெடியனாக களம் இறங்குகிறார்.
தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பின் புகைப்படம் சமூக வலைதளங்களில் லீக் ஆகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட கர்ணன் படத்தின் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

karnan
