கடந்த 2020ஆம் ஆண்டு பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சென்னை பூந்தமல்லி ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கு தற்போது மீண்டும் தூசி தட்டப்படுகிறது. காரணம் அவரது கணவர் ஹேம்நாத் அளித்த புகார். சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத் தான் காரணம் என்று கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். தற்போது ஹேமந்த் பத்திரிகையாளர் சந்திப்பில் சித்ரா தற்கொலைக்கு பல அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் காரணம் என்றும், அதன் காரணமாக தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக சொல்லியிருந்தார். எனவே தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சித்ராவின் கணவன் ஹேமந்த் இதுதொடர்பாக சமீபத்தில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
‘என் உயிருக்கு ஆபத்து உள்ளது. என் மனைவி தற்கொலைக்கு காரணமானவர்கள் பெயர்களை குறிப்பிட்டு அந்த புகாரில் சொல்லியிருக்கிறார். மேலும் சித்ரா போதை பழக்கத்திற்கு அடிமையானவர். ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர். சாதாரண குடும்பத்தில் பிறந்த சித்ரா சீக்கிரம் பிரபலமானது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.
சின்னத்திரையில் நடித்திருந்தாலும் இவர் பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற கார்களை வாங்கியிருந்தார். திருவான்மியூர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்று வாங்கி இருந்தார். சின்னத்திரையில் நடித்த இவர், எப்படி இதெல்லாம் வாங்க வேண்டும் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.
இவருக்கு சென்னை, பெரம்பலூர், புதுக்கோட்டை போன்ற இடங்களில் அரசியல் பிரமுகர்கள் தொழில் அதிபர்கள் பழக்கம் இருந்து வந்துள்ளது. புதுக்கோட்டையில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் போது, மாஜி அமைச்சர் ஒருவர் பக்கத்தில் இருந்து வந்துள்ளார்.
இவர்களின் கண் பார்வையில் வளர்ந்த சித்ரா, அவர்களால்தான் சித்ரா தற்கொலைக்கு காரணமாக இருக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். முதலமைச்சர் அனுமதி பெற்று கூடிய விரைவில் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்படுவர் என்று பேசப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சிகள் சித்ரா தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.