பிரபல கட்சியிலிருந்து த்ரிஷாவிற்கு வந்த மிரட்டல்…?

trisha-hot-aranmanai-2 (6)கௌரவக்கொலைகள் தொடங்கி மனிதர்களுக்கு என்ன நடந்தாலும் அதைப்பற்றி கவலைப்படமாட்டார் த்ரிஷா.

அதே நேரம் ஆடு,மாடு,நாய்,குதிரை போன்ற ஜீவராசிகளுக்கு ஏதாவது என்றால் உடனே ட்விட்டரில் பொங்குவார்.

சில தினங்களுக்கு முன் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் மாநில அரசுக்கு எதிராக பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது.அப்போது, பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி என்பவர், ஒரு குதிரையை தாக்கினார்.

இதனால் அந்தக்குதிரையின் கால் முறிந்தது.

அந்தக்குதிரையினால் இனி சொந்த காலில் நிற்பது கடினம் என்றும், அந்தக்குதிரைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன என்றும் கூறப்படுகிறது.

அடிபட்ட குதிரை நிலை குலைந்து கீழே விழுந்து கிடப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் செய்திகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகின.

அதைப் பார்த்த த்ரிஷா, “மிகவும் வெட்கக்கேடான செய்கை. நீங்கள் நரகத்துக்குச் செல்ல நான் இறைவனை வேண்டுகிறேன்” என்று மிகவும் கோபமாக கருத்து தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட காரணமாக விலங்குகள் நல அமைப்பினா பீட்டாவின் விளம்பர தூதராக இருப்பவர் த்ரிஷா.

தெரு நாய்களுக்காக பல்வேறு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

குதிரை தாக்குதல் சம்பவத்தை வைத்து பாஜக எம்.எல்.ஏ. வை ட்விட்டரில் கடுமையாக சாடியதும் நடிகை த்ரிஷாவுக்கு சம்மந்தப்பட்ட கட்சியிலிருந்து மிரட்டல்கள் வந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த செய்தியை த்ரிஷா உறுதிப்படுத்தவில்லை.மௌனமாகவே இருக்கிறார்.

Comments

comments

More Cinema News: