தமிழ் சினிமாவில் தற்போது அதிகமாக புதுமுக இயக்குனர்கள் அறிமுகமாகியுள்ளார். முன்னணி நடிகர்களாக உள்ளவர்களும் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகின்றன. இதனால் இளம் இயக்குனர்கள் கொஞ்சம் தலைகனமாக தான் உள்ளனர் என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இன்றைய இளம் தலைமுறை இயக்குனர்களுக்கு பொறுப்பே கிடையாது சீனியர் இயக்குனர்களை எப்படி மதிப்பது என்று கூட அவர்களுக்கு தெரிவதில்லை என்ற பேச்சும் அடிபடுகிறது. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது .
விஷ்ணு விஷாலின் இன்று நேற்று நாளை படத்தை இயக்கியவர் ஆர் ரவிக்குமார். இவர் இயக்குனர் சீமானை பாராட்டும் போது ரொம்ப தெனாவட்டாக நடந்து கொண்டுள்ளார். இதைப் பற்றி பலரும் கேள்வி எழுப்பும்போது அது பொய் என்று ரவிக்குமார் தரப்பில் கூறப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் ரவிக்குமாரை தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படி பொய் சொல்லாதீர்கள் நான் சீமானை சந்தித்ததே கிடையாது என பதிவிட்டிருந்தார். ஆனால் ரவிக்குமார் எந்த விழாவில், எந்த இடத்தில் அந்த மாதிரி திமிராக நடந்து கொண்டார் என்பது நிரூபிக்கப்பட்டது.
ஆனால் அந்தப் பதிவு உடனே ரவிக்குமார் தரப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான கே எஸ் ரவிக்குமாரும், ஆர் வி உதயகுமாரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. அதுமட்டுமல்லாமல் நீங்கள் மதிக்காவிட்டாலும் பரவாயில்லை தெனாவட்டாக நடந்து கொள்ளாதீர்கள் என இளம் இயக்குனர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
தற்போது உள்ள புது இயக்குனர்கள் தங்களது சீனியர்களுக்கு உண்டான மரியாதையை கொடுப்பதை மறந்துவிடுகிறார்கள். ஒரு படம் எடுப்பதற்கு இவர்கள் எவ்வளவு கஷ்டப்படும் நிலையில் பல படங்கள் எடுத்து முன்னணி இயக்குனர்களாக வருவதற்கு அவர்கள் எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு இருப்பார்கள். சீனியர் இயக்குனர்களுக்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் மதிக்கவாவது செய்ய வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.