Connect with us
Cinemapettai

Cinemapettai

atlee-bollywood

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்க உள்ள முன்னணி இயக்குனர்.. அப்போ அட்லீ சொன்னதெல்லாம் ரீலா?

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் தான் நடிகர் ஷாருக்கான். இவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது.

மேலும்  கடந்த 2018 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக ஜீரோ என்ற திரைப்படம் வெளியானது. அதற்குப் பிறகு அவர் எந்த ஒரு திரைப்படத்திலும் இதுவரை கமிட்டாகாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தமிழின் முன்னணி இயக்குனரான அட்லி, ஷாருக்கானின் அடுத்த திரைப்படத்தை இயக்க உள்ளார் என பரவலாக பேசப்பட்டது. இதைப்பற்றிய  தகவல்கள் இணையத்தில் வைரலாகி வந்ததோடு, இருவரின் சந்திப்பும் ரசிகர்களிடையே பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இவ்வாறிருக்க தற்போது நடிகர் ஷாருக்கான் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை  அட்லி இயக்கவில்லை என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது ஷாருக்கான் அடுத்ததாக இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ‘பதான்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். இந்தப்படத்தில்  ஷாருக்கானின் ஃபேவரிட் ஹீரோயின் ஆன தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்க  உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகி ஷாருக்கானின் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

இந்த செய்தியைக் கேட்ட ரசிகர்கள் பலர், ‘அட்லி ஷாருக்கான வச்சு படம் எடுக்க போறேன்னு சொன்னதெல்லாம் பொய்யா? இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா?’ என்று இணையத்தில் அட்லியை கலாய்த்து வருகின்றனர்.

Continue Reading
To Top