Connect with us
Cinemapettai

Cinemapettai

சசிகலாவின் வாழ்க்கையை படமாக்கும் சர்ச்சை இயக்குனர்- கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சசிகலாவின் வாழ்க்கையை படமாக்கும் சர்ச்சை இயக்குனர்- கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்

பாலிவுட்டில் மும்பை நிழல் உலக தாதாகளைப்பற்றி படம் எடுத்து பிரபலமானவர் தான் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவர் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர் என  பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தி பணியாற்றிவருகிறார்.

மேலும் சமூக ஊடகங்களில் ‘கிளைமாக்ஸ்’, ‘நேக்கட்’, ‘திரில்லர்’ போன்ற ஆபாசம் நிறைந்த படங்களை இயக்கி, அதனை தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ராம் கோபால். அதுமட்டுமல்லாமல்,  வருடத்திற்கு குறைந்தது இரண்டு படங்களாவது இயக்கி அவற்றின் மோசமான விமர்சனங்கள் மூலம் தற்போது வரை பேசப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது ‘சசிகலா’ என்கின்ற பெயரில் திரைப்படம் ஒன்றை எடுக்கப்போவதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் ராம்கோபால். அதாவது ராம்கோபால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவும் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் அந்த பதிவில், ‘சசிகலா என்ற திரைப்படத்தை இயக்க உள்ளேன்.  தமிழக தேர்தலுக்கு முன்பு இந்த திரைப்படம் வெளியாகும். மேலும் இந்த திரைப்படத்தில் ‘எஸ்’ என்கின்ற பெண்ணும், ‘ஈ’ என்கின்ற ஆணும் சேர்ந்து ஒரு தலைவரை என்ன செய்தார்கள் என்பதை பற்றி விளக்கமாக கூற இருக்கிறேன். இந்தத் திரைப்படம் அந்த தலைவியின் பயோபிக் வெளியாகும் அதே நாளில் வெளியாகும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

லட்சுமி என் டி ஆர் திரைப்படத்தை தயாரித்த ராகேஷ் ரெட்டி தான் சசிகலாவையும் தயாரிக்க இருக்கிறார் என்ற தகவலையும் ராம்கோபால் கூறியிருக்கின்றார். இந்தப்படம் எஸ், ஜெயலலிதா மற்றும் ஈபிஎஸ் ஆகியோருக்கு இடையேயான மிகுந்த சிக்கலான சதிகள் நிறைந்த உறவைப் பற்றிய கதையாக உருவாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார் ராம் கோபால் வர்மா.

இறுதியாக ராம்கோபால் அந்த பதிவில், ‘நெருக்கமாக இருக்கும்போது தான் மிக எளிதாகக் கொல்ல முடியும் என்பது பண்டைய தமிழ் பழமொழி’ என்று  தெரிவித்துள்ளார்.

எனவே, ராம்கோபால் இயக்க உள்ள சசிகலா, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகி அரசியல் களத்தில் சில அதிர்வலைகளை உருவாக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top