நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாகக் கைகோர்க்கும் படத்தின் ஹீரோயின் ரோலுக்காக பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஹாலிடே மற்றும் அகிரா ஆகிய இரு படங்களில் நடித்த சோனாக்‌ஷி சின்ஹா, ஹீரோயின் ரேஸில் முந்தி நிற்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி மற்றும் கத்தி படங்களைத் தொடர்ந்து விஜய்யுடன் மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கத்தி படத்தைத் தயாரித்த லைகா நிறுவனமே இந்த படத்தைத் தயாரிக்க இருக்கிறது.

தற்போது அட்லியின் படத்தில் விஜய் பிஸியாக இருக்கிறார். இதே போல், தமிழ்-தெலுங்கில் வெளிவரும் மகேஷ் பாபு படத்தின் பணிகளில் ஏ.ஆர்.முருகதாஸ் பிஸியாக இருக்கிறார்.