fbpx
Connect with us

அந்த மாதிரி எங்களால் நடிக்க முடியாது.. மறைமுகமாக கீர்த்தி சுரேஷை வம்புக்கிழுத்த சமந்தா!

keerthi-suresh-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அந்த மாதிரி எங்களால் நடிக்க முடியாது.. மறைமுகமாக கீர்த்தி சுரேஷை வம்புக்கிழுத்த சமந்தா!

தென்னிந்திய சினிமா உலகில் ஹீரோயின்களை மையமாக வைத்து  எடுக்கும் படங்களில் தைரியமாக நடித்து காட்டுபவர் தான் நயன்தாரா. இவ்வாறு பெண்ணிய மைய திரைப்படங்கள் சில வெளிவந்திருந்தாலும் ஓரிரு படங்கள் மட்டுமே வெற்றியை பெற்றன.

மேலும் நயன்தாராவை தொடர்ந்து தான் சமந்தா, அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ், டாப்ஸி ஆகியோரும் ஹீரோயின் மைய படங்களில் நடிக்க ஆரம்பித்தனர்.

அந்த வகையில் இந்த வருடம் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பென்குயின்’, ‘மிஸ் இந்தியா’ ஆகிய திரைப்படங்கள் OTT-யில் வெளி வந்திருந்தாலும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இதனால் இனி இப்படிப்பட்ட படங்களில் நடிப்பதில்லை என கீர்த்தி முடிவெடுத்து விட்டாராம். இந்த தகவல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

இந்தநிலையில் கீர்த்தியை தொடர்ந்து அனுஷ்கா, சமந்தா ஆகியோரும்  இப்படிப்பட்ட படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

ஏனெனில் ஒரு படம் தோல்வி பெற்றாலும் தங்களது கேரியரை காலியாகிவிடும் என்பதை புரிந்து கொண்டதால் தான் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளார்கள் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

இதனால் தான் ஹீரோயின்களை மையப்படுத்தி வரும் பட வாய்ப்புகளை எல்லாம்  தட்டிக் கழிக்கிறார்கள் இந்த முன்னணி ஹீரோயின்கள். இந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த செய்தி அறிந்த நயன்தாராவின் ரசிகர்கள், ‘என்ன இருந்தாலும் யாராலயும் தலைவிய அடிச்சுக்க முடியாது’ என்று தங்களது கமெண்ட்டுகளை இணையத்தில் தெளித்து வருகின்றனர்.

Continue Reading
To Top