Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெவ்வேறு மேடைகளில் தல அஜித்தை புகழ்ந்து தள்ளிய நடிகைகள். ஒரு தொகுப்பு.
தல அஜித் பற்றி சுருதிஹாசன் மற்றும் ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்கள் இது தான்.
தல அஜித்
தல அஜித்தை பொறுத்தவரை தன் சினிமா வாழக்கை வேறு பர்சனல் லைப் வேறு என்று பிரித்து வாழுபவர். படங்களில் நடிப்பது இவரது தொழிலாக இருந்தாலும், தன் ஹாபி, பேஷன் என்று அதற்கும் தனி நேர ஒதுக்குவார்.
சினிமாவில் நடிப்பதால் மட்டும் இவருக்கு ரசிகர்கள் என சொல்லமுடியாது. இவரின் பழக்கவழக்கம், குணாதிசயம் என பல பிளஸ் உள்ளது. சினிமாத்துறையில் பலரும் தல அஜித்தை பல மேடைகளில் பாராட்டியுள்ளனர். அத்தகைய நிகழ்வே இந்த தொகுப்பு ..
சுருதிஹாசன்
வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘ரிவேரா 2019’ கலைநிகழ்ச்சியின் நிறைவு விழாவிற்கு சென்றார் நடிகை சுருதிஹாசன், அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்பொழுது பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது.

sruthi
அதில் ஒன்று தான் தல அஜித் பற்றி கேட்டதற்கு, ‘தனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் என்றும், நான் சந்தித்ததில் மிகவும் பண்பான நடிகர் அவர்தான்’ என்று கூறினார்.
ஆண்ட்ரியா

Actress-Andrea-Jeremiah
அண்மையில் நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆன்ட்ரியா, மேடையில் அஜித் குறித்து கூறியது, “சினிமா துறையில் அஜித் போன்ற ஒரு ஜெண்டில் மேனை நான் பார்த்ததில்லை. பெண்களிடத்தில் எப்போதும் மரியாதையுடன் நடந்து கொள்வார். ஒரு முறை படப்பிடிப்பு தளத்தில், அமர்ந்திருந்தார். நான் சற்றே தள்ளி நின்று கொண்டிருந்தேன். உடனடியாக அங்கிருந்தவர்களிடம் நாற்காலி கொண்டு வர சொல்லி, சிஸ்டர் உட்காருங்கள் என கூறினார். இவ்வளவு பெரிய ஹீரோ இப்படி எளிமையாக நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அஜித் அப்படியானவர் தான். உண்மையிலேயே அஜித் சிறந்த மனிதர்” என கூறினார்.
