தெலுங்கு சினிமா படங்களில் எப்போதுமே ஒரு குத்துப்பாடல் இருக்கும். அந்த குத்துப்பாடலில் ஏதாவது ஒரு பிரபல நாயகியை ஆட வைக்க படக்குழு கமிட் செய்வார்கள்.

அந்த வகையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷின் மகன் ஸ்ரீனிவாஸ் ஒரு புதிய படம் நடிக்கிறார். இப்படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிற்கு பெரிய தொகை வழங்கப்பட்டுள்ளது என்று ஏற்கெனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் இப்படத்தில் குத்தாட்ட பாடலுக்கு நடிகை கேத்ரீன் தெரசாவை படக்குழு கமிட் செய்துள்ளனர். இந்த ஒரு பாடலுக்கு மட்டும் அவருக்கு ரூ. 65 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

கேத்ரீன் ஹீரோயினாக நடிக்கும் படத்திற்கே இந்த சம்பளம் இல்லையாம்.