செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

சூர்யா கைவிட்ட கதையில் சிவாவின் நம்பிக்கை பலிக்குமா? வில்லனாகும் மலையாள ஹீரோ

துரோகி படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக எண்ட்ரீ ஆன சுதா கொங்கரா. அடுத்து, இறுதிச் சுற்று மூலம் முன்னணி இயக்குனராக தடம் பதித்தார். அதன்பின், சூரரைப் போற்று படத்தின் மூலம் தேசிய அளவில் சிறந்த இயக்குனராக மாறிய வர் இப்படத்தை இந்தியிலும் சாஃபிரா என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

இந்த நிலையில், சூரரைப் போற்று படத்துக்குப் பின் தமிழில் சூர்யா நடிப்பில் புறநானூறு படத்துக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, பூஜை போடப்பட்டு ஷூட்டிங்கும் சில நாட்கள் நடந்து வந்த நிலையில், திடீரென்று சூர்யா இப்படத்தில் இருந்து விலக படமும் டிராப் ஆனது.

புற நானூறு படம் சூர்யா நடிக்காமல் போனால் ஏன் டிராப் ஆகனும் என்று இப்படத்தை முழுமூச்சுடன் கையில் எடுத்து தொடர்ந்து ஹீரோக்களை அணுகிய நிலையில் இப்படத்தின் கதை சிவகார்த்திகேயனுக்குப் பிடித்துப்போக, அவரே இதில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். சூர்யா இப்படத்தில் இருந்து விலகிய நிலையில் இப்படத்தை சூரரைப் போற்று படத்தைத்தாண்டி ஹிட்டாக்க வேண்டிய கட்டாயத்திலும் சுதா இருக்கிறார்.

இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ஸ்ரீலீலாவும் தம்பியாக அதர்வாவும் நடிக்கவுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவாகவுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுன் வில்லனாக நடிக்க முதலில் லோகேஷ் கனகராஜை ஒப்பந்தம் செய்திருந்தார் சுதா கொங்கரா.

சிவாவுக்கு வில்லனாகும் மலையாள ஹீரோ

ஆனால் கூலி படத்தை அவர் இயக்கி வருவதால் அதில் பிஸியாக இருந்த காரணத்தால் இப்படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை என விலகிவிட்டார். இந்த நிலையில், சிவகார்த்திகேயனுடன் இப்படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் நிவில் பாலியை படக்குழு ஒப்பந்தம் செய்திருபதாக தகவல் வெளியாகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் நிவின் பாலி, சாய்பல்லவி இருவரும் இணைந்து நடித்தனர். இவர்கள் இருவருக்கும் இடையிலான கெமிஸ்டரி பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிவின் பாலி மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும் சிவாவுக்காக அவர் இப்படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் அவருக்காக சிவாவுடன் மலையாள சினிமாவில் கெஸ்ட் ரோலில் நடிக்கலாம் என தகவல் வெளியாகிறது.

சூர்யா கைவிட்ட கதையில் சிவாவின் நம்பிக்கை

மேலும் சிவகார்த்திகேயனின் 25 வது படமாக புறநானூறு கல்லூரியில் நடக்கும் கதை மற்றும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கதைக்களமாகக் கொண்டிருப்பதால் அமரன் படம்போல் இப்படமும் ரசிகர்களின் தன்னை அழுத்தமாகக் காண்பிக்கும் சூர்யா நடிக்க வேண்டிய படத்தில் நடிப்பதால், இதில் இன்னும் தன்னை மாஸ் ஹீரோவாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் எனவும், லேட்டானாலும் இப்படத்தில் முக்கிய நடிகர்கள் இணைந்துள்ளது இப்படத்தின் மீதான வெற்றியை முன்னதாகவே முடிவு செய்யும் வகையில் உள்ளது என சிவாவும் இப்படத்தை நம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

- Advertisement -

Trending News