Tamil Cinema News | சினிமா செய்திகள்
மூத்த நடிகரின் தற்போதைய காதலி.. மூட் அவுட்டில் வாரிசுகள்
தமிழ் சினிமாவில் உள்ள மூத்த கலைஞர்களில் ஒருவர் தான் அந்த நடிகர். நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகங்கள் கொண்டவர். தற்பொழுது இவரின் குடும்பத்தில் தான் பெரிய புயல் ஒன்று வீசி கொண்டுள்ளது. சும்மாவே அந்த நடிகருக்கு பெண்கள் பலவீனம் உண்டு என கூறுவார்கள். அதற்கேற்றாற்போல் நடிகர் திரை உலகில் உள்ள சில நடிகைகளிடம் பழக்கத்தில் இருந்தவர் தானாம்.
அந்த வகையில் பழம்பெரும் நாயகி ஒருவரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து செய்தவர். அதன் பிறகு நீண்ட நாட்களாக முன்னாள் நடிகை ஒருவரிடம் தொடர்பிலிருந்து சமீபத்தில்தான் பிரிந்து சென்றார்.
இதனால் அவரது வாரிசுகளும் அதனைப்பற்றிய வருத்தத்தை மீடியாக்களில் கூறியது தெரிந்ததுதான். இருந்தும் அந்த நடிகருக்கு சமீபத்தில் ஒரு அமெரிக்க வம்சாவளி நடிகை மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதாம். அந்த நாற்பது வயது மதிக்கத்தக்க நடிகை சமீப காலமாக தொடர்ந்து நடிகரின் படத்தில் நடித்து வருகிறார்.
நடிப்பு தானே என்று இருந்தவர்களுக்கு திடீரென சமீபத்தில் வீட்டு விழாக்களில் குடும்பப் புகைப்படங்களிலும் இடம் பிடித்தது அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் சந்தேகத்தில் இருந்த சினிமா உலகம் உறுதி செய்துவிட்டது இவர்களது நட்பை.
ஆனால் இவரது கலை வாரிசுகளுக்கு சுத்தமாக அதில் ஈடுபாடு இல்லையாம். இருந்தும் தன் அப்பாவுக்காக பொறுத்துக் கொண்டு இருக்கிறார்களாம். மேலும் என்னமோ அந்த நடிகை தான் இனிமேல் எல்லாமுமாக இருப்பார் என்பதைப் போல வீடுகளில் நடந்து கொள்கிறாராம்.
ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியதை போல நடந்து விடுமோ என வாரிசுகள் கடும் அப்செட்டில் இருக்கிறார்களாம்.
