வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பணத்தைக் காட்டி விஜயா வாயை அடைத்த லாயர், அல்லல்படும் முத்து.. மீனாவுக்கு சப்போர்ட் பண்ணும் சுருதி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயா கேசை வாபஸ் வாங்கி விட்டால் சத்யா பிரச்சனை ஈசியாக முடித்து விடலாம் என்று முத்துவிடம் லாயர் கூறியிருக்கிறார். அதனால் எப்படியாவது உங்க அம்மாவிடம் பேசி சமரசம் செய்து பாருங்கள் என்று அனுப்பி வைக்கிறார். அதன்படி முத்து மற்றும் மீனா இருவரும் சேர்ந்து அண்ணாமலையை பார்த்து கெஞ்சுகிறார்கள்.

நீங்கள் அம்மாவிடம் போய் பேசினால் நிச்சயம் சத்யா மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி பார்வதி வீட்டுக்கு அண்ணாமலையை அனுப்பி வைக்கிறார்கள். அங்கே அண்ணாமலை போய் விஜயாவிடம் பேசுகிறார். ஆனால் விஜயா இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருக்கும் பட்சத்தில், அண்ணாமலை சத்யாவின் எதிர்கால வாழ்க்கையை பற்றி சொல்லி விஜயாவின் மனசை மாற்ற பார்க்கிறார்.

உடனே விஜயா நீங்கள் சொன்னபடி நான் சத்யா மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்குகிறேன். ஆனால் அதற்கு பதிலாக அந்த பூ கட்டும் மீனா அந்த வீட்ல இருக்க கூடாது என்று டிமாண்ட் பண்ணுகிறார். உடனே அண்ணாமலை, முத்து நம்ம பிள்ளை அவன் என்ன பண்ணுவான் என்று கேட்கிறார். அதற்கு விஜயா, அவனும் கூட சேர்ந்து வெளியே போகட்டும் என்று சொல்கிறார்.

இதை கேட்டதும் அண்ணாமலை நான் உயிரோடு இருக்கும் வரை எண்ணுடன் தான் முத்து இருப்பான். உன் பிடிவாதத்தை குறைத்துக்கொள் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். உடனே விஜயா எனக்கு இது கிடைத்த சான்ஸ் இதை நான் மிஸ் பண்ண மாட்டேன். இந்த ஒரு வாய்ப்பை பயன்படுத்தி முத்து மற்றும் மீனாவை வெளியே அனுப்ப வேண்டும் என்று சொல்லி பிடிவாதமாக இருக்கிறார்.

அப்பொழுது ரோகினி மற்றும் மனோஜ், விஜயாவை பார்த்து பேச வருகிறார்கள். உடனே மனோஜ், மீனாவின் தம்பி மீது கொடுத்திருக்கும் கேசை வாபஸ் வாங்கிடாதே என்று சொல்லி விஜயாவின் மனசில் இன்னும் அதிக வன்மத்தை ஏற்றி பேசுகிறார். அடுத்ததாக வீட்டுக்கு வந்த சுருதி மற்றும் ரவி, மீனாவிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். உங்களுடைய தம்பி தவறு பண்ணி இருந்தாலும் அதற்கு காரணம் அத்தை உங்க தம்பியை அவமானப்படுத்தி பேசியதற்கு தான் பழிவாங்க இப்படி பண்ணி இருக்கிறார் என்று எனக்கு ரவி மூலம் தெரிந்து விட்டது.

சத்தியா இந்த மாதிரி பண்ணியதற்கு ஒரு விதத்தில் அத்தையும் தான் காரணம் என்று சுருதி, மீனாவிற்கு சப்போர்ட்டாக பேசுகிறார். அதே மாதிரி ரவியும் நான் கூட புரிஞ்சுக்காம பேசிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று மீனாவிடம் மன்னிப்பு கேட்டு சப்போர்ட் பண்ணுகிறார். அப்பொழுது வீட்டிற்கு வந்த அண்ணாமலை, உங்க அம்மாவிடம் பேசிப் பார்த்துட்டேன்.

ஆனால் கொடுத்த கேசை வாபஸ் வாங்க மாட்டேன் என பிடிவாதமாக சொல்லிவிட்டதாக கூறுகிறார். அதற்கு முத்து நீ பேசியும் அம்மா ஏன் இப்படி மறுத்து விட்டார் என்று கேட்கும் பொழுது, அண்ணாமலை உங்க அம்மா நீங்க ரெண்டு பேரும் வெளியே போய் விட்டால் கேசை வாபஸ் வாங்க தயார் என சொல்கிறார். ஆனால் நான் உயிருடன் இருக்கும் வரை நீங்கள் இருவரும் இந்த வீட்டில் என்னுடன் தான் இருக்கணும் என்று அண்ணாமலை சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

இதனை அடுத்து முத்து மற்றும் மீனாவிற்கு வேறு வழியில்லாததால் லாயரிடம் பார்த்து பேசுகிறார்கள். அப்பொழுது கேஸ் வாபஸ் வாங்கவில்லை என்று சொல்கிறார்கள். உடனே லாயர் அப்படி என்றால் எனக்கு அஞ்சு லட்ச ரூபாய் கொடுங்கள் நான் இந்த பிரச்சினையை முடித்து விடுகிறேன் என்று சொல்லி பணத்தை ஏற்பாடு பண்ணிட்டு வாங்க என்று அனுப்பி வைக்கிறார்.

இதனால் பணத்துக்கு என்ன பண்ணுவது என்று தெரியாமல் முத்து மற்றும் மீனா அல்லல்படுகிறார்கள். அந்த நேரத்தில் சீதாவுக்கு பார்த்த மாப்பிள்ளை போன் பண்ணி இந்த சம்பந்தம் வேண்டாம் என்று கல்யாணத்தை நிறுத்த சொல்லி விடுகிறார்கள். இதை கேள்விப்பட்ட சீதா கொஞ்சம் கூட கவலைப்படாமல் இப்பதான் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று சொல்கிறார்.

அடுத்ததாக லாயர், விஜயாவை தேடி பார்வதி வீட்டுக்கு போகிறார். அப்பொழுது சத்தியா மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்க சொல்கிறார். ஆனால் அதற்கு விஜயா அப்படி வாங்கினால் எனக்கு அதில் என்ன லாபம் என்று கேட்கிறார். உடனே லாயர், அதுக்காக நான் உங்களுக்கு பணம் தருகிறேன் என்று சொல்கிறார். இதை கேட்ட விஜயா பணத்தின் மீது இருக்கும் ஆசையால் வாயடைத்து போயி பார்க்கிறார். அந்த வகையில் இந்த டீல் ஓகே என்பதற்கு ஏற்ப விஜயா, சத்யா மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்கி விடுவார்.

- Advertisement -

Trending News