Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட நான் வரவே இல்லப்பா.. நம்புங்க ப்ளீஸ்.. கதறும் ராய் லட்சுமி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் தான் கலந்து கொள்ள இருப்பதாக பரவி வரும் வதந்திக்கு மீண்டும் மறுப்பு தெரிவித்து இருக்கிறார் நடிகை ராய் லட்சுமி.
பிக்பாஸ் இந்தி மக்களுக்கு மட்டுமே பரிச்சையமான ஒன்று. அப்படி அந்நிகழ்ச்சியில் என்ன சுவாரசியம் இருக்கிறது என யோசித்த ரசிகர்களுக்காக, கடந்த வருடம் தமிழில் கால் பதித்தது. தமிழ் சினிமாவின் உலக நாயகன் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். டீசர் ப்ரோமோவே பலருக்கு எதிர்பார்ப்பை அதிகரிக்க நிகழ்ச்சி அனைவரையுமே கட்டி போட்டது. கமலின் வித்தியாசன ஆங்கரிங் முதல் நாள் பொறுமையாக தொடங்கினாலும், அதை தொடர்ந்து, அவர் காட்டிய பாவனைகள் எல்லாம் அம்மாடி ரகம் தான். பலகட்ட சர்ச்சைகள் நிகழ்ச்சியில் உருவாகியது. இதனை தொடர்ந்து, வீட்டில் கடைசியாக ஆரவ், சினேகன், ஹரிஷ் கல்யாண் மற்றும் கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் தாக்குப்பிடித்தனர். இதில், அதிக சர்ச்சைகளை சந்தித்த ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, இரண்டாவது சீசன் எப்போது தொடங்கும் என ஆர்வம் பலர் மத்தியில் எழுந்தது.
ஒரு வருடமாக எப்போது எப்போது என காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் 17ந் தேதி முதல் ஒளிபரப்பப்பட இருக்கிறது. கமல்ஹாசனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். ஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் பிரபலங்கள் குறித்த் எந்த தகவலையும் நிகழ்ச்சி குழு வெளியிடாமல் ரகசியமாக வைத்து இருக்கிறார். ஆனால், ஒரு யுகத்தின் அடிப்படையில் சில பிரபலங்கள் கலந்து கொள்ளலாம் என ஒரு பட்டியலில் வெளியாகி வருகிறது. இதில் அடிக்கடி, நடிகை ராய் லட்சுமி பெயரும் அடிப்படுகிறது. ஆனால், அவர் நான் கலந்து கொள்ளவில்லை என பலமுறை மறுத்தும் விட்டார். ஆனால், வதந்தி என்னவோ நின்றபாடி இல்லை. தொடர்ந்து, றெக்கை கட்டி வரும் இத்தகவலுக்கு தனது ட்விட்டரில் கடும் கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார்.
இதுகுறித்து, ராய் லட்சுமி வெளியிட்டு இருக்கும் பதிவில், ஒரே விஷயம் குறித்து மீண்டும், மீண்டும் ட்வீட் செய்து கலைத்து விட்டேன். நான் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. தொலைக்காட்சி தரப்பில் இருக்கும் சில விஷமிகள் தான் என் பெயரை பயன்படுத்தி அப்பாவியான ரசிகர்களை ஏன் ஏமாற்றி வருகிறார்கள் என ஆச்சரியமாக இருக்கிறது எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
