Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீங்க ஆட்டத்தில இல்லையா? ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய லட்சுமி மேனன்!
கேரளாவை பூர்வீகமாக கொண்ட லட்சுமிமேனன் தமிழ் சினிமாவில் ‘சுந்தரபாண்டியன்’ என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் கும்கி, றெக்க, மஞ்சப்பை, பாண்டிய நாடு படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் இறுதியாக ‘றெக்க’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு தான் படிக்கப் போவதாக திரைப்படங்களை ஒதுக்கிவைத்துவிட்டு படிக்க சென்றார்.
தற்போது இவர் நடிப்பதை நிறுத்தி நான்கு வருடங்கள் ஆன நிலையில் மீண்டும் ரீ என்ட்ரி ஆக உள்ளாராம். இதனால் தனது உடல் எடையை குறைத்தும் உள்ளாராம்.
சமீபத்தில் லட்சுமிமேனன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக வதந்திகள் வெளியானது. இதைப் பற்றி லட்சுமிமேனனிடம் கேட்டபோது அது உண்மையல்ல என்ற தகவலை தெரிவித்துள்ளார். இது பிக்பாஸ் ரசிகர்களை பெருமளவில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் லட்சுமி மேனன் இயக்குனர் சுசீந்திரன் இயக்கவுள்ள படத்தில் விக்ரம் பிரபுவுடன் சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
இந்த படத்திற்கு செகண்ட் ஹீரோயினாக நடிகை ஸ்ரீதிவ்யாவும் நடிக்கவுள்ளாராம். நடிகை ஸ்ரீதிவ்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜீவாவுடன் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தில் கடைசியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
அப்போ தமிழ் சினிமாவில் இந்தப் படம் டபுள் டமாக்கா தான் என்று ரசிகர்கள் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
