Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான்கு வருடங்கள் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் குவியும் பட வாய்ப்புகள்.. கெத்து காட்டும் லட்சுமி மேனன்
கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமிமேனன். அதற்கு பின்னர் சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் அதிஷ்டமான நடிகையாக இடம் பிடித்து விட்டார்.
கடைசியாக விஜய் சேதுபதியுடன் ரெக்க என்ற படத்தில் நடித்ததற்கு பின் தமிழ் சினிமாவில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லையாம்.
இப்படி குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் தேடி தேடி நடித்து வந்த லட்சுமி மேனன் தற்போது பட வாய்ப்பு இல்லாததால் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நான் தயார் என்று அறிவித்துவிட்டாராம்.
இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் படவாய்ப்பு கொடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர். இதற்கு இடையில் விஷாலுடன் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக சினிமாவை விட்டு விலகி விட்டதாகவும் செய்திகள் பரவலாக பேசப்பட்டது.
இதற்கு பதிலளித்த லட்சுமி மேனன் விஷாலுடன் தற்போது வரை நல்ல நண்பராக பழகி வருகிறோம் என்பதையும் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
2020-ல் சிப்பாய், எங் மங் சங்,கௌதம் கார்த்திக்குடன் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார் லட்சுமி மேனன். தனது உடல் இடையை குறைத்த புகைப்படம் சமுக வலைத்தளத்தில் வைரலானது.
இப்படி அதிர்ஷ்டம் இருந்தாலும், சினிமாவில் நிலைத்து இருக்க கவர்ச்சியும் முக்கியம் என்பதை தற்போது புரிந்து கொண்டுள்ளாரா லட்சுமி மேனன்?.

laxmi-menon
