fbpx
Connect with us

அரசியலுக்கு அச்சாரம் போடுகிறாரா லாரன்ஸ்.?

News | செய்திகள்

அரசியலுக்கு அச்சாரம் போடுகிறாரா லாரன்ஸ்.?

நடிகர் ராகவா லாரன்ஸின் சமீபத்திய நடவடிக்கைகளை பார்க்கும் போது அவருக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதாகவே தெரிகிறது. நடன அமைப்பாளராக தனது திரைப்பயணத்தை துவக்கிய லாரன்ஸ் பின்னர் ஹீரோவாக உயர்ந்தார். தொடர்ந்து இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் மாறிய லாரன்ஸ் தற்போது மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளது. நடிகர் லாரன்ஸ் சினிமாவில் நடித்து வந்தாலும் ஏராளமான நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். தனது அறக்கட்டளை மூலமாக ஏராளமான குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

சமீபத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக மாணவர்களும், இளைஞர்களும் நடத்திய எழுச்சி போராட்டத்தில் லாரன்ஸ் அதிதீவிரமாக அவர்களுக்கு உதவி செய்து வந்தார். போராட்டாக்காரர்களுக்கு தேவையான சாப்பாடு, மருந்து உள்ளிட்ட ஏராளமான உதவிகளை செய்து வந்தார். அதோடு அவர்களுடன் களத்தில் இறங்கி போராடினார். முதல்வரிடம் சென்று மாணவர்களை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலர் தொடர்ந்து லாரன்ஸ் உடன் இருந்து வருகிறார்களாம். அவரின் அலுவலகத்திலேயே அவர்கள் இணைந்து சில பணிகளை செய்து வருகிறார்களாம். விரைவில் லாரன்ஸ் அரசியலில் தீவிரம் காட்ட இருப்பதாகவும், இந்த இளைஞர்கள் அனைவரும் பின்னின்று அவருக்கு உதவ இருப்பதாகவும் லாரன்ஸ்க்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், லாரன்ஸ் இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார். அப்போது இதுதொடர்பான விஷயங்கள் எதுவும் வெளியாகலாம் என தெரிகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top