மெரினா கடற்கரையில் மாணவர்களும், இளைஞர்களும் நடத்திய மாபெரும் புரட்சியின் காரணமாக தமிழர்களின் கலாச்சார அடையாளமாக ஜல்லிக்கட்டு மீட்கப்பட்டது. அதன் வெற்றி விழா போன்று பிரபலமான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு உள்ளூர் மக்கள் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக கேலரியில் அமர்ந்த குடும்பத்துடன் ரசித்தனர்.

ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க போராடிய மாணவர்கள், இளைஞர்களுடன் ஜல்லிக்கட்டை காண நேற்று காலை 7 மணிக்கு அலங்காநல்லூர் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார். லாரன்ஸை மட்டும் அனுமதிக்கிறோம். மற்றவர்களை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர். லாரன்ஸ் மட்டும் ஜல்லிக்கட்டை காண சென்றார். அங்கு இருந்தவர்களிடம், “இவர்கள்தான் இந்த ஜல்லிக்கட்டுக்கே காரணமானவர்கள் அவர்களை அனுமதியுங்கள்” என்று லாரன்ஸ் காவல்துறை அதிகாரிகளிடமும் வாதிட்டார். மாவட்ட கலெக்டரை தொடர்பு கொள்ள முயன்றார் எதுவுமே நடக்கவில்லை. இதனால் சிறிதுநேரம் ஜல்லிக்கட்டை பார்த்துவிட்டு அங்கிருந்து பாதியிலேயே வெளியேறினார்.