ராகவா லாரன்ஸ் ரொம்ப பிஸியாக நான்கு முதல் ஐந்து படங்களில் வேலை செய்து வருகிறார். தன்னுடைய சொந்த தம்பி எல்வின் நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் கேமியோ ரோல் பண்ணுவதாக சொல்லி இருந்தார். ஆனால் இன்றுவரை அவருடைய படத்தில் நடிக்கவில்லை.
காஞ்சனா 4 படத்தை கூடிய விரைவில் இயக்கவிருக்கிறார் அதற்கான வேலைகளையும் செய்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார். இதற்கிடையில் ராகவா லாரன்ஸ் ஒரு ரீமேக் படத்திலும் நடிக்கவிருக்கிறார்
ஹிந்தியில் சூப்பர் ஹிட் ஆன படம் “கில்”. இந்த படம் இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள். அதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். கிடைக்கும் வேலைகளில் காஞ்சனா 4 படத்தின் வேலைகளையும் செய்து வருகிறார்.
தம்பியை டீலில் விடும் ராகவா மாஸ்டர்
இடையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க, கலைப்புலி எஸ் தானு தயாரிக்க ஒரு படத்தில் ஹீரோவாக கமிட்டாகி இருந்தார் லாரன்ஸ். ஆனால் அந்த படத்தில் நடிப்பதற்கு சுமார் 30 கோடிகள் வரை சம்பளம் கேட்டு அதிர்ச்சி அடைய செய்தாராம். இதனால் கலைப்புலி தானு அவ்வளவு காசுகள் கொடுக்க முடியாது என அந்த படத்தை ட்ராப் செய்துவிட்டார்.
சொந்த தம்பி எல்வின் படத்தை இதுவரை முடித்துக் கொடுக்கவில்லை ஆனால் மற்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஏற்கனவே விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படத்திலும் ஒரு கெஸ்ட் ரோல் பண்ணுவதாக இருக்கிறார் ராகவா லாரன்ஸ். அதுவும் இன்னும் கை கூடி வரவில்லை.
- இருக்கிறத விட்டுட்டு பறக்குது ஆசை பட்ட ராகவா லாரன்ஸ்.
- சொந்த செலவில் சூனியம் வைத்த ராகவா மாஸ்டர்
- ராகவா லாரன்ஸ் வழியில் வந்த புது சிஷ்யன்