fbpx
Connect with us

மாணவர்களுக்கு உதவி கலவர தீயில் கருகிய மீனவ குப்பத்திற்கு ரூ 10 லட்சம்: நடிகர் லாரன்ஸ் தமிழன்டா

Lawrance

News / செய்திகள்

மாணவர்களுக்கு உதவி கலவர தீயில் கருகிய மீனவ குப்பத்திற்கு ரூ 10 லட்சம்: நடிகர் லாரன்ஸ் தமிழன்டா

சென்னை மெரினாவில் மாணவர்கள் நடத்திய  ஜல்லிக்கட்டு போராட்டம் கடைசி நாளில் பயங்கர கலவரத்தில் முடிந்தது.

அந்த கலவரத்தில் அருகிலுள்ள மீன குப்பத்திலுள்ள வீடுகள் மற்றும் மீன் மார்க்கெட் தீவைத்து கொளுத்தப்பட்டது. மாணவர்களுக்கு உதவி செய்த, அடைகலம் கொடுத்த மீனவர்கள் பலர் போலீஸாரால் தாக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று வலைதளம் மூலம் பேட்டியளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்: மாணவர்கள் போராட்டத்தின் போது கடைசிநாளில் கடல் வழியாக வந்தும் மீனவர்கள் மாணவர்களுக்கு உணவு அளித்தனர்.

அவர்கள் செய்த உதவியை மறக்க முடியாது இன்று அவர்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். அவர்களுக்கு நாம் ஏதாவது வழியில் உதவ வேண்டும். மாணவர்கள் கையில் இருந்து ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என சேர்க்க வேண்டும்.

நான் முதலாவதாக பத்து லட்சம் ரூபாய் மாணவர்கள் கையில் கொடுக்கிறேன்.

போராட்டத்தின் போது போலீஸார் மாணவர்களுக்கு நல்ல முறையில் பாதுகாப்பு கொடுத்து எங்களுக்கு உதவி செய்து வந்தனர். கடைசி நாளில் அப்படி நடந்து கொண்டது ஏன் என்று தெரியவில்லை.

போராட்டம் நடத்திய மாணவர்கள் கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் ஏற்று கொண்டு நிறைவேற்றியுள்ளனர். அவர்களுக்கு நன்றியை நேரில் தெரிவிக்கவுள்ளோம்.

இம் மாதம் 29ம் தேதி மெரினாவில் சில மாணவர்கள் ஒன்று சேர்ந்து கட்சி துவங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. கட்சி துவங்க நாங்கள் போராடவில்லை.

ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியை அனைவருடைய ஒப்புதலுடன் ஒன்று சேர்ந்து கொண்டாடுவோம்.

https://www.youtube.com/watch?v=xj0h03gRXxU

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top