Connect with us

Videos | வீடியோக்கள்

கையில் லத்தியுடன் வெளுத்து வாங்கும் விஷால்.. ரிலீஸ் தேதியுடன் அதிரடி காட்டும் ட்ரைலர்

விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

Laththi-Official-Trailer-Vishal

இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடிப்பில் பல வருடங்களாக உருவாகி வரும் படம் லத்தி. இந்தப் படத்தை விஷாலின் நண்பர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்த தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சுனைனா நடித்துள்ளார்.

இந்நிலையில் லத்தி படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டும் வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் இப்போது ட்ரெய்லருடன் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. மேலும் லத்தி படத்தில் ஒரு குடும்பத் தலைவன் ஆக விஷால் நடித்துள்ளார்.

Also Read : தேடிப் போய் வாய்ப்பு கொடுத்த லோகேஷ்.. விஜய்யுடன் ஒரு சம்பவம் இருக்கு, சஸ்பென்சை உடைத்த விஷால்

அதாவது மனைவி, குழந்தை என சந்தோஷமாக வாழும் விஷால் சில காரணங்களினால் போலீஸ் பதவியை இழக்கிறார். அதன் பிறகு மகனின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் போலீசில் சேர்கிறார். மேலும் இப்படத்தில் ரவுடிகளை தனது கையில் இருக்கும் லத்தியால் வெளுத்து வாங்குகிறார்.

போலீஸ் கையில் லத்தி கொடுத்து உயர் அதிகாரிகள் அடிக்க சொன்னால் அது ஆர்டர் இல்லை, ஆஃபர் என வசனங்களை விஷால் தெறிக்க விடுகிறார். இந்த ட்ரெய்லரில் யுவன் சங்கர் ராஜா பிஜிஎம் வேற லெவலில் வொர்க் அவுட் ஆகியுள்ளது. விஷால் லத்தி படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.

Also Read : விஷால் நின்னா குத்தம் நடந்தா குத்தம்.. அவமானத்தால் அந்த மாதிரி இடத்திற்கு நான் போறதில்ல

அதுமட்டுமின்றி இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. ஆகையால் விஷாலின் திரை வாழ்க்கையில் இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். லத்தி படம் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read : உச்சகட்ட வளர்ச்சியால் ஆணவத்தில் ஆடும் யோகி பாபு.. விஷால், உதயநிதியை சேர்த்து அசிங்கப்படுத்திய மேடை

Continue Reading
To Top