இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் கிரண்பேடி. இவர் அண்மையில் புதுவை மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றார்.அதன்பிறகு புதுவை தூய்மைக்காக கிரண்பேடி எடுத்து வரும் நடவடிக்கைகள் பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

மேலும் அவர், ரஜினியை புதுவை மாநில வளர்ச்சிக்கு நல்லெண்ணத் தூதராக நியமிக்க விரும்புவதாக தன் விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் லதா ரஜினிகாந்த், கிரண்பேடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் புதுவை மாநிலத்தின் நல்லெண்ண தூதராக ரஜினி பொறுப்பேற்பது குறித்து பேசப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.