Connect with us
Cinemapettai

Cinemapettai

வாடிவாசல் படத்திலிருந்து விலகுகிறாரா சூர்யா.? அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்!

vaadivasal-suriya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வாடிவாசல் படத்திலிருந்து விலகுகிறாரா சூர்யா.? அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவில் பின்புலத்துடன் கால் பதித்தாலும் தன்னுடைய கடின முயற்சியால் மட்டுமே முன்னேறி முன்னணி நடிகராக விளங்குபவர் தான் சூர்யா. சமீபகாலமாக சூர்யாவின் நடிப்பில் வெளியான எந்த ஒரு படமும் அவருடைய ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை.

இதனால் சூர்யா தன்னுடைய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்காக அயராது உழைத்து நடித்துக் கொடுத்த படம் தான் ‘சூரரைப்போற்று’. இந்தப் படம் தற்போது சூர்யாவின் ரசிகர்களால் பெருமளவு பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அடுத்ததாக சூர்யா வெற்றிமாறனின் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ என்ற படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் கிடைத்தன. இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று தயாரிப்பாளர் எஸ் தாணு பெயரில் ஒரு ட்வீட் போடப்பட்டிருந்தது. அந்த ட்வீட்டில் சூர்யா ‘வாடிவாசல்’ படத்திலிருந்து விலகியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் கோலிவுட்டில் சூர்யா விலகி விட்டாரா? அல்லது அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகர் நடிக்கப்போகிறாரா? என்ற சலசலப்பு ஏற்பட்டது.

இவ்வாறிருக்க தற்போது தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு தன்னுடைய சொந்த ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து இந்த தகவல் பற்றிய விளக்கத்தை அளித்துள்ளாராம்.

அந்த பதிவில் வாடிவாசல் படத்தில் சூர்யா தான் கண்டிப்பாக நடிப்பார் என்று கூறி வாடிவாசல் திரைப்படத்தைப் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தாணு.

Vaadivaasal-cinemapettai

Vaadivaasal-cinemapettai

இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, சூர்யாவின் ரசிகர்களால் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top