fbpx
Connect with us

வெளிவர காத்துக்கொண்டிருக்கும் விஜய்சேதுபதியின் அடுத்த படம்.. மறைமுகமாக ஆப்பு வைத்த தயாரிப்பாளர்!

vijay-sethupathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெளிவர காத்துக்கொண்டிருக்கும் விஜய்சேதுபதியின் அடுத்த படம்.. மறைமுகமாக ஆப்பு வைத்த தயாரிப்பாளர்!

மக்கள் செல்வன் என்ற பட்டத்துடன் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தான் விஜய் சேதுபதி. இவர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் தான் ‘மாமனிதன்’.

இந்தப் படத்தை பிரபல இசை அமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவின் ஒய் எஸ் ஆர் புரோடக்சன்ஸ் தயாரித்துள்ளது.

தற்போது இந்த படத்தை பற்றிய அதிரடியான முடிவினை இந்தப் படத்தின் தயாரிப்பாளர் எடுத்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் கசிந்து வருகின்றன.

அதாவது ‘மாமனிதன்’ படம் OTT தளத்தில் விரைவில் வெளியிடப்படும் என பல சமூக  ஊடகங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது யுவன்சங்கர் ராஜா தான் தயாரித்துள்ள ‘மாமனிதன்’ படம் கண்டிப்பாக OTT தளத்தில் வெளியிடப்படாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளாராம்.

ஏற்கனவே விஜய் சேதுபதி, யுவன்ஷங்கர்ராஜா, சீனு ராமசாமி ஆகியோர் இணைந்து ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘இடம் பொருள் ஏவல்’ மற்றும் ‘தர்மதுரை’ ஆகிய ஹிட் படங்களை கொடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

maamanithan-cinemapettai

maamanithan-cinemapettai

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘மாமனிதன்’ படம்  இதுவரை திரையிடப்படாமல் இருப்பது விஜய்சேதுபதியின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Continue Reading
To Top