fbpx
Connect with us

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள சூர்யா.. நான்கு சூப்பர் ஹிட் இயக்குனர்களுடன் வரிசை கட்டி நிற்கும் படங்கள்

suriya-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள சூர்யா.. நான்கு சூப்பர் ஹிட் இயக்குனர்களுடன் வரிசை கட்டி நிற்கும் படங்கள்

தமிழ் திரையுலகில் சினிமா பின்புலத்துடன் களம் இறங்கினாலும், தனது கடின உழைப்பால் மட்டுமே சாதித்த நடிகர் தான் சூர்யா.

இந்த நிலையில் சூர்யா, அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்களைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்து, சூர்யா ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளது.

அதாவது நடிகர் சூர்யா, சில வருடங்களாக தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எந்த ஒரு ஹிட் படத்தையும் கொடுக்கவில்லை. இதனால் அவருடைய ரசிகர்கள் ஏதாவது நல்ல படம் வருமா என்ற எதிர்பார்ப்பில் காத்துக்கிடக்கின்றனர்.

மேலும் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி OTT தளத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்தடுத்து தயாராக உள்ள 4 பிரம்மாண்டமான திரைப்படங்களின் இயக்குனர்களை பற்றிய லிஸ்ட் வெளிவந்துள்ளது.

இதோ அந்த லிஸ்ட்:

  • சூர்யா 39- இயக்குனர் டிஜே கனகவேல்
  • சூர்யா 40- இயக்குனர் பாண்டிராஜ்
  • சூர்யா 41- இயக்குனர் சிறுத்தை சிவா
  • சூர்யா 42- இயக்குனர் வெற்றிமாறன்

மேலும் இந்த முறையாவது சூர்யா, அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் ஹிட் படங்களை கொடுப்பார் என நம்பப்படுகிறது.

suriya-neet

suriya-neet

Continue Reading
To Top