Connect with us
Cinemapettai

Cinemapettai

kumki2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

18 யானையும் கிளைமாக்ஸ் காட்சியும்.. இப்பவே பீதியை கிளப்பும் கும்கி 2

கோலிவுட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி, தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த படம் தான் கும்கி. இந்தப்படத்தை பிரபுசாலமன்  வித்தியாசமான கதைக்களத்தில் இயக்க, லிங்குசாமி தயாரித்திருந்தார்.

மேலும் இந்தப் படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா, அஸ்வின் ராஜா என பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான டி இமான்  இசையமைத்திருந்தார். படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் மெகா ஹிட் அடித்தன. இதனைத் தொடர்ந்து ‘கும்கி 2’ படம் பற்றி அறிவிப்பு வெளியாகி பல ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இப்படி இருக்க தற்போது ‘கும்கி 2’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும், அதில் உள்ள கிளைமாக்ஸ் சீன் பற்றியும் படத்தின் இயக்குனரான பிரபு சாலமன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள தகவல்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகின்றன.

அதாவது கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து, கும்கி 2 படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக அளவில் இருந்து வருகிறது. இந்த படத்திற்கான 80 சதவீத வேலைகள் முடிந்துவிட்டதாகவும், 20% வேலைகள் மட்டும் எஞ்சி இருப்பதாகவும் பிரபு சாலமன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் கும்கி 2 படம் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, மே அல்லது ஜூன் மாத விடுமுறை நாட்களில் வெளியிடப்பட உள்ளதாக பிரபு சாலமன் கூறியிருக்கிறார். அதேபோல் கும்கி படத்தில் கிளைமாக்ஸ் சீனில் விஎஃப்எஸ் சரியாக ஒர்க்கவுட் ஆகவில்லை என்றாலும், எமோஷனல் சீன் அங்கு கைகொடுத்தது என்றும், ஆனால் அந்தத் தவறை இந்த கும்கி 2 படத்தில் தான் செய்யவில்லை என்றும் பிரபுசாலமன் தெரிவித்ததோடு, கும்கி 2 படத்தை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

அது என்னவென்றால், இந்த கும்கி 2 படத்தின் கிளைமாக்ஸ் சீனை 18 யானைகளை வைத்து எடுத்திருக்கிறாராம். அதேபோல் இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொருவருக்கும் கம்பீரமும் வெற்றியும் கலந்த உணர்வு இருக்கும் என்றும், இந்தப் படத்தின் கதையும் ஒரு உண்மை சம்பவத்தை தழுவிய கதை என்றும் தெரிவித்திருக்கிறார் பிரபுசாலமன்.

எனவே, கும்கி 2 படத்தை பற்றிய இந்த சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி, ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பை அதிக அளவில் ஏற்படுத்தி வருகின்றன.

Continue Reading
To Top